போடு.. எச்.வினோத்தையும் மடக்கி பிடித்த சிவகார்த்திகேயன்.. செம மேட்டரா இருக்கே

Published on: November 13, 2024
siva 1
---Advertisement---

Sivakarthikeyan: ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் ஒரு ஆங்கர் ஆக பணிபுரிந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன். இதன் மூலம் கிடைத்த வரவேற்பால் ஆங்காங்கே பல ஊர்களில் நடக்கும் இசை கச்சேரிகளிலும் பங்கு கொண்டு தன்னுடைய திறமையை காட்டி வந்தார். விஜய் டிவியில் இவர் ஆங்கராக இருக்கும் பொழுது பல நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது .

டஃப் கொடுக்கும் நடிகர்:அப்போதே அவர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனை ஒரு நாள் நீ ஒரு நல்ல நிலைமைக்கு வருவாய் என கூறி இருந்தனர். இன்று அவர்களுக்கே ஒரு டஃப் கொடுக்கும் நடிகராக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுவும் சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் யாருமே அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை தனுஷையே சேரும். மூணு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததற்கு காரணமே தனுஷ் தான். அதன் பிறகு மெரினா படத்தில் ஹீரோவாக நடித்து தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம்ஈர்த்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமா ராஜா, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களாகும் .

இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே முதல் மருமகள் வரை… சன் டிவி சீரியல்களில் என்ன நடக்க போகுது!..

அமரன் என்ற ஹிட் படம்:இப்படி நகைச்சுவை கலந்த படங்களிலேயே நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முறையாக ஹீரோ என்ற படத்தில் தான் தன்னுடைய ஆக்சனை வெளிப்படுத்தினார். அதிலிருந்து தொடர்ந்து ஆக்சன் சார்ந்த படங்களிலும் நடித்து இன்று ஒரு மிகப்பெரிய ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதுவும் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் வைத்து போற்றுகின்றனர். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய லைன் அப்பில் என்னென்ன படங்கள் இருக்கின்றன என்பதை பற்றி பல செய்திகள் வெளியாகிக் கொண்டு வந்தன. ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

எச்.வினோத்:அதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்திலும் அந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்திலும் தொடர்ந்து பல நல்ல இயக்குனர்களுடன் கைகோர்த்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் இன்னொரு இயக்குனரும் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை எச் வினோத்.

amaran
amaran

இதையும் படிங்க: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!

ஏற்கனவே எச் வினோத் தற்போது விஜயை வைத்து அவருடைய 69 ஆவது படத்தை இயக்கி வருகிறார் .அந்த படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. தனுஷ் படத்திற்கு பிறகு தான் எச் வினோத்தும் சிவகார்த்திகேயனும் இணைவதாக தெரிகிறது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை சமீபத்தில் தான் நடைபெற்றது. எப்படியும் அடுத்த வருடம் தான் இதனுடைய படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து அவருடைய அடியை மிகவும் பத்திரமாகவும் நேர்த்தியாகவும் எடுத்து வைக்கிறார் என்று தெரிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.