வீட்டில் இல்லை.. பூட்டை ஆட்டாதீர்!.. கங்குவாவை புரமோஷன் செய்த ரஜினியை கலாய்க்கும் மாறன்!..

Published on: November 14, 2024
rajini
---Advertisement---

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இன்று உலகம் முழுவதும் பல மொழிகளிலும் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கங்குவா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கடந்த 2 வருடங்களாக சூர்யாவின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் இரண்டு வருடங்களாக கங்குவா படத்தில் நடித்து கொண்டிருந்தார் சூர்யா.

கங்குவா சரித்திர கதை கொண்ட திரைப்படமாகும். சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா இப்படத்தை அதிக பொருட்செலவில் உருவாக்கியிருந்தார். ஹாலிவுட்டில் வெளிவந்த கேம் ஆப் த்ரோன்ஸ் வெப் சீரியஸ் போல ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசையில் இப்படத்தை சிவா இயக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்துல பாசிட்டிவ்ஸ் விட நெகடிவ்ஸ் அதிகமா இருக்கே?!… இப்படி சாய்ச்சு புட்டிங்களேப்பா!…

இந்த படத்திற்கு படக்குழு செய்த புரமோஷன் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. இதுதான் முதல் ஃபேன் இண்டியா தமிழ் படம், 2 ஆயிரம் கோடி வசூலிக்கும், இதே பாஸோடு சக்சஸ் மீட்டுக்கு வந்திருங்க என ஞானவேல் ராஜா சொன்னது எல்லாமே ட்ரோலில் சிக்கியது.

சூர்யாவும் ஒருபக்கம் பல இடங்களுக்கும் சென்று கங்குவாவை புரமோஷன் செய்தார். இந்நிலையில், இன்று காலை வெளியான கங்குவா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா ரசிகர்கள் படம் சூப்பர் என சொன்னாலும் பொதுவான ரசிகர்கள் படத்தின் 2ம் பாதி சரியில்லை, படத்தில் கதை என ஒன்றுமே இல்லை, எதிலும் கனெக்ட் செய்து கொள்ள முடியவில்லை. செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை, படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. விஸ்வலாக பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் கதையாக ஈர்க்கவில்லை ன பல விதமான விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள்.

rajini

இந்த படத்தை புரமோஷன் செய்த நடிகர் ரஜினி ‘ நான் அண்ணத்த ஷூட்டிங்கில் இருந்தபோது சிவாவிடம் எனக்கு ஒரு சரித்திர கதையை ரெடி பண்ணுங்கள் என சொன்னேன். அப்படி சிவா உருவாக்கிய கதைதான் கங்குவாவாக இருக்கும் என நினைக்கிறேன்’ என சொல்லி இருந்தார்.

இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து ‘தலைவர் அப்ப அப்படி சொன்னார். இப்ப ‘நான் வீட்டில் இல்லை.. பூட்டை ஆட்டாதீர்’ என சொல்வார்’ என கலாய்த்திருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.