அந்த சித்தப்பா நான் இல்லைங்கோ?!.. நான் வேற… பதறிப்போய் ட்வீட் போட்ட வலைப்பேச்சு அந்தணன்..!

Published on: November 14, 2024
---Advertisement---

சோசியல் மீடியாக்களில் ஸ்ரீகாந்தின் சித்தப்பா வலைப்பேச்சு அந்தணன் என்று கூறி வந்த நிலையில் அதற்கு அந்தணன் பதிலளித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், கனா கண்டேன், பம்பரக்கண்ணாலே, துரோகி, பூ, நண்பன் உங்களுடைய ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: Vidamuyarchi: காலைல ஆரம்பிச்சு சாயங்காலம் முடியுற கதை.. ‘விடாமுயற்சி’ பற்றி சூப்பரான அப்டேட் கொடுத்த பிரபலம்

தொடக்கத்தில் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த இவர் பின்னர் தொடர் தோல்விகளை கொடுத்த காரணத்தால் சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட நடிகராக மாறிவிட்டார். இருப்பினும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். தற்போது கூட ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘மனதெல்லாம் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

நான் மணிரத்தினம் சாரை முதல் முறையாக அப்போதுதான் சந்தித்தேன். அவர் என்னை டெஸ்ட் சூட் எடுக்க வேண்டும் என்று கூறினார். முதலில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு டெஸ்ட் செய்தார்கள். அதன் பிறகு மணி சாரிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா கொங்குராவிடம் நான் டயலாக் சொல்லிக் கொண்டிருந்தேன். எங்களுக்கு கதை தெரியாது.

ஒப்பந்தம் போடும்போது தான் கதை கூறப்படும். நீண்ட நாட்களாக ஒரு சிட்டி பாய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் அப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த சமயத்தில் தான் தனக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னை கேட்காமல் எனது மேனேஜராக இருந்த என்னுடைய சித்தப்பா மணிசாரின் படத்திற்கு நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.

உடல் நலம் சரியானதற்கு பிறகு தான் நடந்த சம்பவத்தை கூறினார்கள். அப்போது எனது சித்தப்பாவிடம் நான் சண்டை போட்டேன். எதற்காக இப்படி செய்தீர்கள் என்று, அப்போது அவர் ஏற்கனவே கமிட்டான திரைப்படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க விட மாட்டேன் என்று அந்த இயக்குனர் கூறிவிட்டதாக தெரிவித்தார். அந்த அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: இதையாடா இவ்வளவு நாள் ஒட்டிக்கிட்டு இருந்தீங்க!.. கங்குவாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்…

இதை பார்த்த பலரும் அந்த சித்தப்பா வலைப்பேச்சு அந்தணன் தான் என்று கிளப்பி விட்டார்கள். மேலும் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மட்டும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தால் தற்போது முன்னணி நடிகராக சினிமாவில் இருந்திருப்பார் என்று கூறி வந்தார்கள். இதை பார்த்த வலைப்பேச்சு அந்தணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘சித்தப்பா நான் இல்லை.. நான் வேற.. சித்தப்பா வேற’.. என்று கூறியிருந்தார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.