Home News Reviews Throwback Television Gallery Gossips

என்னை அடிக்கக் கூடிய தகுதி இந்த நடிகைக்குத்தான் இருக்கு.. ரஜினி சொன்ன அந்த நடிகை யார்?

Published on: November 14, 2024
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இத்தனை ஆண்டுகாலமாக இவருடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை கட்டி காத்து வருகிறார். பொதுவாக எந்த ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க தயங்குவார்கள். ஏனெனில் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற பயம் தான்.

படையப்பா: ஆனால் அதில் துணிந்து இறங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினியை ஒரு வழி பண்ணி விடுவார் ரம்யா கிருஷ்ணன். மிகவும் திமிருப்பிடித்த கதாபாத்திரத்தில் ரஜினியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசையில் அவருக்கு எதிராக எவ்வளவோ காரியங்களை செய்வார். இது பார்க்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வித கோபத்தை ஏற்படுத்தினாலும் இந்தப் படம்தான் இன்றளவும் ரம்யா கிருஷ்ணனை பெருமை படுத்தும் படமாகவே மாறியிருக்கிறது.

இதையும் படிங்க: Kanguva: லக்கி பாஸ்கர் டீம்கிட்ட ஞானவேல் ராஜா கத்துக்கணும்!.. கொஞ்சமா பேசினாரு!…

இதே மாதிரியான ஒரு படம் தான் மன்னன். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக விஜயசாந்தி நடித்திருப்பார். முதலில் குஷ்பூவை ஜோடி போல காண்பித்து பின் விஜயசாந்தி சூழ்நிலை காரணமாக ரஜினியின் மனைவியாக மாறுவார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு விஜயசாந்திதான் பொருத்தமாக இருப்பார் என ரஜினியே விஜயசாந்திக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.

நடிக்க முடியாது: ஆனால் அந்த நேரத்தில் விஜயசாந்தி படு பிஸியாக இருந்ததனால் முதலில் முடியாது என சொல்லியிருக்கிறார். பின் ஒரு முறை கதை கேளுங்கள். கேட்டுவிட்டு உங்க முடிவை சொல்லுங்க. இந்த கேரக்டருக்கு நீங்கதான் கரெக்ட் சாய்ஸ் என ரஜினி சொன்னாராம். ரஜினியின் பேச்சை மீற முடியாதவராய் விஜயசாந்தி ஓகே சொல்லியிருக்கிறார்.

vijaya
vijaya

பின் வாசு கதை சொல்ல நடிக்கவே முடியாது என மறுத்திருக்கிறார் விஜயசாந்தி. அதற்கு காரணம் ரஜினியை அடிக்கும் மாதிரியான காட்சியை நினைத்துதான். மறுபடியும் ரஜினி போன் செய்து பேசினாராம். அப்போதும் விஜயசாந்தி மறுத்திருக்கிறார். அதற்கு ரஜினி இந்த மாதிரி என்னை அடிக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒரு தகுதி உங்களுக்குத்தான் இருக்கிறது என்று கூறினாராம்.

இதையும் படிங்க: Vidamuyarchi: காலைல ஆரம்பிச்சு சாயங்காலம் முடியுற கதை.. ‘விடாமுயற்சி’ பற்றி சூப்பரான அப்டேட் கொடுத்த பிரபலம்

மேலும் படத்தின் 100வது நாள் விழாவிலும் சிவாஜி உட்பட பல நடிகர்கள் கூடியிருந்த மேடையில் ரஜினி என்னை அடிக்க தகுதி உள்ள நடிகை விஜயசாந்திதான் என கூறினாராம். இதை ஒரு பேட்டியில் விஜயசாந்தியே கூறினார்.