Delhi Ganesh: டெல்லி கணேஷ் மறைவால் அவர் வளர்த்த நாயின் நிலைமையை பாருங்க.. வைரலாகும் வீடியோ

Published on: November 14, 2024
ganesh 1
---Advertisement---

Delhi Ganesh: சமீபத்தில் தான் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன டெல்லி கணேஷ் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகம் சார்பாக பலபேர் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்பட்டவர் டெல்லி கணேஷ். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் .

இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பெரும்பாலும் கமலின் படங்களில் இவரை அதிகமாக காணலாம். ஆரம்ப காலங்களில் இருந்து இப்போது ரிலீஸான இந்தியன் 2 வரைக்கும் கமலின் அனைத்து படங்களிலும் டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பை நன்கு பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: என்னை அடிக்கக் கூடிய தகுதி இந்த நடிகைக்குத்தான் இருக்கு.. ரஜினி சொன்ன அந்த நடிகை யார்?

டெல்லி கணேஷை பொறுத்த வரைக்கும் அடிப்படையில் நல்ல ஹியூமரான ஒரு மனிதர். அதுதான் கமலுக்கும் தேவைப்பட்டது .ஏனெனில் கமலின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலுமே ஹியூமர் கலந்த படங்களாகவே வெளிவந்திருக்கின்றன. அதை சரியான முறையில் டெல்லி கணேசை வைத்து பயன்படுத்திக் கொண்டார் கமல்.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மைக்கேல் மதன காமராஜன் படத்தை குறிப்பிடலாம் அதில் ஐயர் பாஷையில் அவர் பேசும் விதமே ஒரு தனி அழகு. அதைப்போல அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார் டெல்லி கணேஷ். அதுவரை குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவே நடித்து வந்த டெல்லி கணேஷை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என முதன் முதலில் கமல் கேட்டபோது முடியாது என மறுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: லக்கி பாஸ்கர் டீம்கிட்ட ஞானவேல் ராஜா கத்துக்கணும்!.. கொஞ்சமா பேசினாரு!…

அதன் பிறகு கமலின் வற்புறுத்தலின் பேரில் தான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். இவருடைய நடிப்பில் எத்தனையோ படங்கள் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம் டெல்லி கணேஷ். அதன் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும்போதே தூக்கத்தில் அவர் உயிர் போனதாக அவருடைய மகன் தெரிவித்தார் .

இவருடைய மறைவை அறிந்த பல முக்கிய பிரபலங்கள் கண்கலங்கி நேரடியாக வந்து  அஞ்சலி செலுத்துவதை நாம் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இன்று அவரைப் பற்றிய ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது டெல்லி கணேஷின் உருவப்படத்திற்கு அவருடைய மகனும் மகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் டெல்லி கணேஷ் வளர்த்த நாயும் அவர் இல்லாமல் சோகத்தில் வாடுவது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DCWkeYWI1Do/?igsh=NnJ5dDdkNHplYW13

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.