Connect with us
vishal

Bigg Boss

Biggboss Tamil 8: சின்ன பையன்னு ‘நெனச்சா’ இப்படி பண்ற… இந்த வாரம் குறும்படம் நிச்சயம்!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே விஷால் மீது ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. அவற்றுடன் புதிதாக ஒரு கேஸும் சேர்ந்து இருக்கிறது. சவுந்தர்யா, ஜாக்குலின் இருவரையும் விஷால் கிண்டலடிக்க அவருடன் ஜெப்ரியும் சேர்ந்து கொண்டார்.

பொதுவாக ஒருவரின் நிறம், இனம், மொழி, உடல் ஆகியவற்றை வைத்து கிண்டல் செய்வது தவறான விஷயம். கடந்த வாரம் சவுந்தர்யாவின் உடல் அமைப்பு குறித்து விஷால் ஓவராக பேசினார். இதை விஜய் சேதுபதி கண்டித்தபோது அவர் அதற்கு உடன்படவில்லை. நான் தப்பே செய்யல என்று சாதித்தார்.

இதையும் படிங்க: கோபியை கிழித்த ராதிகா… பண விஷயத்தை கறந்த ரோகிணி… செந்திலை கஷ்டப்படுத்தும் பாண்டியன்..

அப்போதே அவருக்கு குறும்படம் போட்டு கண்டித்து இருந்தால், இப்போது நிலைமை இந்தளவுக்கு வந்திருக்காது. தற்போது வளரும் இளம் போட்டியாளர் ஜெப்ரியும் இந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார். ஜெப்ரியின் கதையை கேட்டு அவர்மீது விசேவுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது.

சின்ன பையன் பெரிதாக பின்புலம் இல்லை என்பதால் நன்றாக வர வேண்டும் என்று ரசிகர்களும் ஜெப்ரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவை அத்தனையையும் ஜெப்ரி கெடுத்து கொள்கிறார். விஷாலின் நட்பு நிச்சயம் ஜெப்ரிக்கு ஏற்றதில்லை.

vishal

#image_title

எனவே நிச்சயம் இந்த வாரம் விசே குறும்படம் போட்டு விஷாலை ஹேண்டில் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இருவரும் சேர்ந்து கிண்டல் செய்தபோது முத்துக்குமரன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார். அவர்மேல் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விஷயத்தில் நிச்சயம் ஜென்டில்மேன் தான்.

அப்புறம் என்ன பிக்பாஸ் குறும்படம் போட நேரம் வந்துருச்சு!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top