என்கிட்ட இருந்து போகும் போது இப்படித்தான் போகனும்.. அஜித் சொன்ன விஷயம்

Published on: November 15, 2024
ajith
---Advertisement---

அஜித்தை பற்றி சமீப காலமாக வரும் செய்திகள் சற்று வித்தியாசமானவராக தான் இருப்பாரோ என யோசிக்க வைக்கிறது. அவரைப் பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன. யாருடனும் பேச மாட்டார். யாருக்கும் எந்த உதவியும் பண்ண மாட்டார். ரசிகர்களை வந்து சந்திக்கவும் மாட்டார். ஆனால் என் படத்தை ரசிகர்கள் வந்து பார்க்க வேண்டும் என நினைப்பது எந்த விதத்தில் சரி .என்றெல்லாம் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மருத்துவ உதவி: ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாமல் இன்றுவரை அவர் ஏகப்பட்ட உதவிகள் செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான சில பேர் கூறி நாம் கேட்டிருக்கிறோம். மருத்துவ செலவுக்காக எத்தனையோ பேர் பயன்பெற்று இருக்கின்றனர். ஏகப்பட்ட பேருக்கு அவர் மருத்துவ உதவி செய்திருக்கிறார். வீடு கட்டி கொடுத்திருக்கிறார்.  இந்த நிலையில் சமீப காலமாக சுப்ரீம் சுந்தர் அஜித்தை பற்றியும் விடா முயற்சி பற்றியும் பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: படமாடா எடுத்து வச்சிருக்கீங்க?.. நாங்க என்ன பைத்தியமா?!.. பொங்கிய ரசிகர்..

இதில் அஜித்தின் இன்னொரு முகமும் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. பொதுவாக ஒரு இயக்குனருடன் அவர் கமிட் ஆகிவிட்டால் தொடர்ந்து அந்த இயக்குனருடன் மூன்று படங்கள் அஜித் நடித்துக் கொடுப்பார் என்ற ஒரு செய்தி இருக்கின்றது. அதற்கு ஒரு உதாரணம் எச் வினோத் மற்றும் சிறுத்தை சிவா இவர்களை கூறலாம். அதிலும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார் அஜித் .

siva
siva

தொடர்ந்து 4 படங்கள்: மறுபடியும் அவருடன் இணைந்து படம் பண்ணப் போவதாகவும் ஒரு செய்தி பரவி வருகின்றது. இந்த நிலையில் வீரம் படத்தின் மூலம் சிறுத்தை சிவாவும் அஜித்தும் முதன்முதலில் இணைந்தனர். அந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து வேதாளம் படத்தில் இணைந்தனர். இந்தப் படமும் ஹிட்டானது. மூன்றாவது படமாக விவேகம் படம் அமைந்தது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: சின்ன பையன்னு ‘நெனச்சா’ இப்படி பண்ற… இந்த வாரம் குறும்படம் நிச்சயம்!

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை .விவேகம் படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா வேறொரு நடிகருடன் கமிட்டாக இருந்தாராம். அப்போது அஜித் சிறுத்தை சிவாவிடம் என்னிடமிருந்து போகும்போது ஒரு வெற்றி இயக்குனராக தான் செல்ல வேண்டும் என சொல்லி மறுபடியும் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறினாராம் .

அதன் பிறகு தான் விசுவாசம் என்ற ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் படம் உருவானது. விவேக படம் தான் அப்படி ஆகிவிட்டது. விசுவாசம் படத்தையாவது நல்ல முறையில் பண்ண வேண்டும் என அந்த படத்தில் உழைத்த அனைவருமே அவர்களுடைய உழைப்பை போட்டிருக்கின்றனர். எதிர்பார்த்த அளவு அந்த படமும் பெரிய அளவில் ஹிட்டானது. இப்படி அஜித் தன்னுடன் சேர்ந்து பணிபுரிபவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் செயல்களும் இருக்கும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.