Bigg Boss Tamil 8
Biggboss Tamil: சீசீ… பிக்பாஸில் ஆனந்தி போட்ட ’அந்த’ சப்தம்… இதுவே பசங்க பண்ணா என்ன ஆகிருக்கும்?
Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க தவறிவிட்டது. ஆனால் கண்டெண்ட் கொடுக்கிறேன் என போட்டியாளர்கள் செய்யும் கூத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து பெரியளவு ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய வரம்பை மீறி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: Kanguva: ஒரே படத்துல நடுத்தெருவுக்கு வரப்போறாரு?!… 2000 கோடி அம்பேல்… இப்படி போட்டு பொளக்குறீங்களே!…
இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே விஜய் டிவி போட்டியாளர்கள் தங்களுடைய பெயரை கெடுத்துக்க கூடாது என்பதற்காக அதீத கவனமாக விளையாடுவதாக வெளியேறிய போட்டியாளரான தர்ஷா குப்தா பேசியது வைரலாக மாறியது. அது போலவே விஜய் டிவி பிரபலங்கள் ரொம்ப கவனமாக விளையாடி வருகின்றனர்.
இருந்தும் சில போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் வரம்பு மீறி பேசி வருவதும் நடந்து வருவது வாடிக்கையாக மாறியிருக்கிறது. இதில் விஜய் டிவியின் பிரபலமான விஜே விஷால் சக போட்டியாளரான சௌந்தர்யாவை மோசமாக விமர்சித்து இருந்தார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் அதிருப்தியை ஏற்பட்டது.
இது குறித்து கடந்த வார எபிசோடில் விஜய் சேதுபதி விஜே விஷாலினை கண்டித்தார். ஆனால் நிகழ்ச்சியின் மரியாதை கருதி அது குறித்து அவர் தெளிவாக பேசாததால் விஜே விஷால் மோசமாக நடந்து கொண்டார். தொடர்ச்சியாக பிக்பாஸ் தொகுப்பாளர் மீதே மரியாதை இல்லாமல் அவர் நடந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆத்தாடி!.. ஒரே ஒரு பாட்டுக்கு 21 தடவையா?!… கங்குவா பட நடிகை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!…
இந்நிலையில் தற்போது பெண் போட்டியாளர்களான ஜாக்குலின், ஆனந்தி உள்ளிட்டோர் நடந்து கொள்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாக்குலினுக்கு முதுகை காலால் மிதித்து விடும் ஆனந்தி ஆஆ என சப்தமிடுகிறார். பின்னர் ஆடலுடன் பாடலை கேட்டேன் எனவும் பாட தொடங்குகிறார்.
அருகில் இருக்கும் ஜெப்ரி இந்த டைமில் இந்த பாடலை பாட கூடாது என்கிறார். பெண்களும் இப்படி பேச தொடங்கி இருப்பது பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. விளையாட சொன்னா இப்படி பண்ணிட்டு இருக்கீங்களேயப்பா எனக் கேள்வி எழுந்துள்ளது.