
Cinema News
எனக்கு அது ரொம்ப கூச்சமா இருக்கும்… கெத்து தினேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க…
Published on
அட்டகத்தி படத்தில் கெத்து தினேஷை பா.ரஞ்சித் அறிமுகம் செய்தார். அப்போது வெறும் தினேஷாக இருந்த இவர் இந்தப் படத்தின் சக்சஸ்சுக்குப் பிறகு அட்டகத்தி தினேஷ் ஆனார். அதன்பிறகு குக்கூ படம். நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விசாரணை வெற்றிமாறன் இயக்கத்தில் வந்தது.
லப்பர் பந்து
Also read: போர் அடிக்கிதா? ஓடிடியில் இந்த பிளிங்க் படத்தை பாருங்க… அசந்து போய்டுவீங்க!…
இது ஆஸ்கர் வரை போய் திரும்பியது. அதன்பிறகு திருடன் போலீஸ் படம். இதுவும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுத் தந்தது. அடுத்ததாக வந்த லப்பர் பந்து படம் அதிரிபுதிரி வெற்றியைக் கொடுத்தது. அந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து தினேஷாக வலம் வந்தார். படத்திலும் உண்மையிலேயே அவர் கெத்து தான்.
கட்டி அணைத்த கமல்
படத்தில் அவருக்கு செம நடிப்பு. உலகநாயகனாக வலம் வந்த கமலே படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினார். அப்போது தயங்கி நின்ற கெத்து தினேஷைக் கட்டி அணைத்துப் பாராட்டினாராம் கமல்.
ஜென் துறவி போல
labber bandhu
இப்படி தனக்கென எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகரான கெத்து தினேஷ் நீண்ட தாடியுடன் ஜென் துறவி போல அமர்ந்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் சொன்ன சில தகவல்கள் சுவாரசியமானவை. அவற்றில் இருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம்.
படங்களைப் பற்றி வெற்றிமாறன் எங்கிட்ட ரொம்ப கம்மியா பேசுவாரு. நானும் அவரு படங்களைப் பற்றி சொன்னதில்லை. நானும் சார் படத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ண மாட்டேன். லப்பர் பந்து படத்தைப் பார்த்துட்டு ரொம்ப நல்லாருக்கு.
வெற்றி மாறன் பாராட்டு
ரொம்ப நாள் கழிச்சி நல்லாருக்கு. நல்லா பண்ணிருந்தே. எமோஷன்லாம் நல்லா பண்ணிருந்தே. உனக்கு நிறைய சக்சஸ் இருக்கு. இது அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான சக்சஸ்னு சொன்னாரு. எனக்குக் கூச்சமா இருக்கும்.
Also read: Kanguva: மனநலம் கருதி இப்படத்தை தவிர்ப்பது நல்லது?!… ஒரே போடா போட்ட பிரபல யூடியூபர்..!
நான் வீட்ல யாரு கூடவும் சேர்ந்து என் படத்தைப் பார்க்க மாட்டேன். இப்ப தான் அந்த மூடுக்கே வந்துருக்கேன். டிவில படம் வந்தா கூட பார்ப்பேன். முதல்ல எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது.
நீங்க பக்கத்து இருந்தீங்கன்னா கூட ஸ்கிரீன்ல நான் வந்தேன்னா எனக்கு அது ரொம்ப அன்ஈசியா இருக்கும் என்ற கெத்து தினேஷிடம் சித்ரா லட்சுமணன் ‘ஏன்’னு சிரித்துக் கொண்டே கேட்கிறார். அதற்கு அவரும் ‘அது தெரில சார்… அந்த மாதிரி பழகிட்டேன்’னு கூச்சத்துடன் சிரிக்கிறார்.
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...