சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜூனா வீட்டு இளைய மருமகளாகும் விஜய் நாயகி… அடங்கம்மா!…

Published on: November 16, 2024
Naga chaitanya
---Advertisement---

Nagarjuna: பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் கல்யாண சீசன் போல தற்போது அவருடைய வீட்டுக்கு இரண்டாவது நாயகி மருமகளாக செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

பிரபல தயாரிப்பாளரின் மகளான லட்சுமியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தெலுங்கு சினிமாவில் சூப்பர் நடிகராக இருக்கும் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. பின்னர் இத்தம்பதி அடுத்த ஆறு ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரோகிணியின் பித்தலாட்டம்… எழில் விஷயத்தை உடைத்த செல்வி… மீனாவை கேள்வி கேட்ட பாண்டியன்

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக இருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அகில்.  அகிலுடன் நாகசைதன்யாவும் நாகார்ஜுனாவுடன் தான் வளர்ந்தார்.

முதலில் மகன்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த நாகர்ஜுனா சைதன்யாவுக்கு சமந்தாவையும், அகிலுக்கு  பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்ரேயா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் முடிந்த கையோடு அகிலின் திருமணம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அகில் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் அகிலின் திருமணம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை கசியாமல் இருந்தது.

இதையும் படிங்க: என்னை கொலை பண்ண வச்சிடாதீங்க…! சிவகுமார் சினிமாவை விட்டு விலக இதான் காரணமாம்…!

இருவரும் இரண்டு பேரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமணம் முடிந்த கையோடு இந்த திருமணமும் நடக்க வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.