58 கோடி எல்லாம் பொய்!.. கங்குவா முதல் நாள் வசூல் இதுதான்!.. லீக் பண்ணிட்டாங்களே!…

Published on: November 16, 2024
---Advertisement---

Kanguva: சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து உருவான திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் சூர்யாவின் திரைப்படம் இது.

ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சூர்யாவும் கடுமையான உழைப்பை இப்படத்தில் போட்டிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் உள்ள காடுகளில் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மொத்தம் 2 வருடங்கள் இப்படத்தின் வேலை நடந்தது.

இதையும் படிங்க: Kanguva: எலே வீரபாகு!… 58 வடைக்கு ரசீது எங்கப்பா?!… ஞானவேல் ராஜாவை கலாய்க்கும் பிரபலம்..!

அதிக பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக கங்குவா படம் உருவானது. முதல் பாகம் கடந்த 14ம் தேதி வெளியானது. பட்ஜெட் அதிகம் என்பதால் அதிக அளவில் புரமோஷனும் செய்தார்கள். படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும், 11 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும், இதுதான் உண்மையான பேன் இண்டியா படம் என என்னென்னவோ பேசினார் ஞானவேல் ராஜா.

சூர்யாவோ ‘எழுத்தாளர்களும், கதாசிரியர்களும், சினிமாகாரர்களும் இப்படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்’ என பேசினார். எனவே, படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படம் நன்றாக இல்லை.. கதையே இல்லை.. ஒன்றும் புரியவில்லை.. படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார்கள்’ என சொன்னார்கள்.

எனவே, முதல் நாளே இப்படத்திற்கு வசூல் குறைந்து போனது. ஆனால், இப்படம் உலக அளவில் 58 கோடியை வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் நேற்று அதிகார்ப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என சிலர் சொல்கிறார்கள்.

பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் கங்குவா முதல் நாள் வசூல் தோராயமாக தமிழகத்தில் 9.5 கோடியும், ஆந்திரா தெலுங்கானா சேர்த்து 7 கோடியும், கேரளா 3.9 கோடியும், கர்நாடகா 2.8 கோடியும், வட இந்தியாவில் 4 கோடியும், அமெரிக்காவில் 3.75 கோடியும், மற்ற நாடுகள் எல்லாம் சேர்த்து 8.35 கோடியும் என மொத்தம் 39.3 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் இதில் தயாரிப்பாளரின் லாபம் 18.2 கோடி மட்டுமே இருக்கும் என பதிவிட்டிருக்கிறார்.

twitt
#image_title

இப்படி இருக்கும் போது 2 நாள் வசூல் சேர்த்து இப்படம் 80 கோடி என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்களால் 2ம் நாள் இப்படத்திற்கு வசூல் குறைந்துவிட்டது என பலரும் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.