முதல் வரியிலே தனுஷ் மீது இவ்வளவு வன்மமா? வேற ஏதோ மாஸ்டர் பிளான் மாதிரி தெரியுதே…

Published on: November 16, 2024
nayandhanush
---Advertisement---

Dhanush: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கும் நிலையில் சில விஷயங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட தொடங்கி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அப்படத்தில் தனுஷின் தோற்றம் விமர்சிக்கப்பட்டாலும் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ச்சியாக காதல் கொண்டேன் திரைப்படமும் அவரின் கேரியர் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.

Also Read

இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக என பல அவதாரங்கள் எடுத்தார். இது மட்டுமல்லாமல் நடிப்பில் அசுரத்தனம் காட்டி தமிழை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பக்கம் சென்ற முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார்.

தேசிய விருது, பிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பலவற்றை குறித்த நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராகவும் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது.

குபேரா திரைப்படம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தற்போது ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா என்று ஒரு கடிதத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு விஷயம் தனுஷ் ரசிகர்களை சீண்டி பார்த்து இருக்கிறது.

இதையும் படிங்க: கோலிவுட் ஹீரோக்களின் செண்டிமெண்ட் ஆயுதங்கள் இதுதான்!.. போட்டு பொளக்கும் புளூசட்டமாறன்…

இதுல நியாயம் யார் பக்கம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனா, தனுஷ் மேல 100 விமர்சனம் இருந்தாலும் அவர் தன்னுடைய தனிப்பட்ட கடின உழைப்பால் மட்டுமே இந்த நிலையில் இருக்கிறார். நயன்தாரா எழுதி இருக்கும் கடிதத்தின் முதல் வரியில் S/O.கஸ்தூரி ராஜா, B/O.செல்வராகவனு குறிப்பிட்டு உள்ளனர்.

இதை பார்க்கும் போது எதோ தனுஷோட வளர்ச்சிய சாதாரணமா நீ பெரிய இயக்குனர் அப்பா, இயக்குனர் அண்ணா மூலம் வந்தவன்ற மாதிரி காட்ட எடுத்திருக்கும் முயற்சியாகவே இருக்கிறது. அவரை சொல்வதை விட நீங்கள் அவர் மேல ரொம்ப வன்மம் மட்டும் தான் காட்டுவது போல இருப்பதாக கமெண்ட்களும் பறந்து வருகிறது.