latest news
Nayanthara: டார்கெட் தனுஷ் இல்ல.. நயனின் பிசினஸ் புத்தி எப்படியெல்லாம் வொர்க் ஆகுதுனு பாருங்க
Nayanthara: தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் தற்போது பெரிய அளவில் சூடு பிடித்திருக்கிறது. நயன்தாராவின் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கின்றது. அவருடைய வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்கள் இவைகளை உள்ளடக்கியதாக அந்த ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நயனுக்கும் தனுசுக்கும் இடையே நடக்கும் அந்த பிரச்சனை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு முழு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது: நயன்தாராவின் அந்த ஆவணப்படம் வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆவணப்படத்தின் டீசர் டிரைலர் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் மக்களிடம் எந்தவித ஒரு எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் அந்த ட்ரெய்லர் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல நாளை மறுநாள் வெளியாக கூடிய அந்த ஆவணப்படத்தை பற்றிய செய்தியும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை .
இதையும் படிங்க: கங்குவா படம் பார்த்தவர்களுக்கு நிவாரண தொகை… இத யாருமே கவனிக்காம விட்டீங்களே!…
இந்த ஒரு சூழ்நிலையில்தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய ஆவண படத்திற்கு ஒரு பப்ளிக் சிட்டியை தேடிக்கொண்டார் என பிஸ்மி கூறினார். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளையும் பாடலையும் பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தனுஷிடம் போராடிக் கொண்டிருக்கிறோம் .
ஏன் அமைதி காத்தார்? : அவர் என்ஓசியே தரவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் நயன். ரெண்டு வருஷமாகவே இந்த பிரச்சனை நடக்கும் பட்சத்தில் இன்றைக்கு அதுவும் அந்த ஆவணப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இதை பொதுவெளியில் ஷேர் செய்து ஏன் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்.
அப்போ இதனுடைய பின்னணி ,ஒரு பக்கம் தனுஷை அசிங்கப்படுத்த வேண்டும். இன்னொரு பக்கம் அதையே தன்னுடைய ஆவணப்படத்திற்கான பப்ளிசிட்டியாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற நயன்தாராவின் வியாபார நோக்கம் தான் இது என பிஸ்மி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கர்ச்சீப் வச்சி மறச்சிட்டியே!.. கடற்கரையில் கிளுகிளுப்பு காட்டும் கங்குவா ஹீரோயின்!..
நடிகைகளின் ஆவேசத்திற்கான காரணம்: இன்னொரு பக்கம் நயனுக்கு ஆதரவாக ஸ்ருதிஹாசன், பார்வதி என பல நடிகைகள் அவர்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த நடிகைகளை பார்த்தீங்கனா எல்லாருமே தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்தான். ஆனால் அவர்கள் வேறு ஏதோ நிலைப்பாட்டிற்காகத்தான் தனுஷுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர்.
அது பாராட்டவேண்டிய விஷயம்தான். ஏனெனில் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் செய்தது தப்பு தப்புதான் என தைரியமாக குரல் கொடுக்கின்றனர். அதே சமயம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு வேறேதேனும் காரணம் இருந்தால் அதையும் வெளியே கொண்டுவர வேண்டும் என பிஸ்மி கூறியிருக்கிறார்.