Cinema News
Nayanthara: தனுஷ், நயன்தாராவுக்கு இடையில் என்ன தான் பிரச்சனை? நடந்ததை யாராவது தெளிவா சொல்றாங்களா?
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. அதில் நானும் ரௌடிதான் பாடல் தான் 3 வினாடியில் இடம்பெறுவதாகவும் அதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு இருப்பதாகவும் நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி உள்ளார்.
Also read: இரு பக்கமும் பணத்தால் வந்த இடி!… நயன்தாரா திடீரென பொங்கியதற்கு இதுதான் காரணமா?!…
தனுஷ், நயன்தாராவுக்கு இடையில் தற்போது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பே புகைந்த இந்தப் பிரச்சனைக்கு இப்போ முடிவு வருமா?
நயன்தாராவுக்கு தனுஷ் மேல ஏன் இத்தனை வன்மம்? 3 செகண்டுக்குப் பத்து கோடியா? அது எங்களோட செல்போன்ல தானே எடுத்தோம். அதுக்கு எல்லாம் இப்படி கேட்பீங்களா என்றெல்லாம் நயன்தாரா தரப்பில் தனுஷ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
நானும் ரௌடிதான்
ஆனால் நயன்தாராவுக்கும், தனுஷூக்கும் பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்று பார்க்க வேண்டியுள்ளது. தனுஷ் தயாரிப்பில் 2013ல் வெளியான படம் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப்படத்திற்காக ஒரு பாடல் காட்சிக்கு நயன்தாரா சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம்.
2015ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் நானும் ரௌடிதான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடித்து இருந்தனர்.
படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்தப் படத்தின் போது தான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாம். இந்தப் படத்தைத் தயாரித்தவர் தனுஷ். 2013ல் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் 2015ல் தான் ரிலீஸ். 6 கோடிக்குள் பட்ஜெட் போட்டு தயாரிக்க முடிவு எடுத்தாராம் தனுஷ்.
ஏன் பேசவில்லை?
ஆனால் அந்தப் படம் முடியும் போது 16 கோடியாகிவிட்டதாம். நயன்தாரா இந்தப் படத்தால் தனுஷூக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் வருண் என்ற நெட்டிசன். தனுஷ் அந்தப் படத்தைக் குறைந்த விலைக்கு விற்றுள்ளார். என்ஓசி கொடுக்க அதுவே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்த நேரம். அதனால் அவர்களுக்குள் அந்தக் காதல் வேரூன்றி வளர்ந்து வந்ததால் காலம் போனதே தெரியவில்லை. அதனாலும் படப்பிடிப்பு முடிய காலதாமதமாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
பட்ஜெட் 16 கோடி
இதனால் தான் 6 கோடி என்று போடப்பட்ட பட்ஜெட் 16 கோடியாகி விட்டதாம். அந்தப் படம் நல்லா ஓடினாலும் அது விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தான் லாபமே தவிர தனுஷூக்கு பெரிய நஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.
அதற்கு வட்டியும் முதலுமாக வாங்கத் தான் இப்போது தனுஷ் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள 3 வினாடி நானும் ரௌடிதான் காட்சிக்கு 10 கோடி கேட்டு என்ஓசி போட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
எல்ஐசி
தற்கிடையில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரனும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். எல்ஐசி படத்திற்கு என் அனுமதி பெறாமலேயே விக்னேஷ் சிவன் பயன்படுத்தி விட்டார். என் கதைக்கும் அந்தத் தலைப்புக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. அதனால் வழங்க முடியாது என்று சொல்லியும் அதிகாரத்தன்மையுடன் தலைப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உங்கள் கணவர்.
Also read: தனுஷ் பண்ணது தப்புன்னா உங்க புருஷன் பண்ணது?!… நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்..
அதற்கு ‘உன்னால என்ன பண்ண முடியும் என்ற அதிகாரத் தன்மை தானே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கடவுள் இருக்குறான் குமாருன்னு சொல்ற மாதிரி அவர் உங்களுக்கு பதில் சொல்வார் என்ற தோரணையிலும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை எல்லாம் பார்க்கும்போது காதல் கண்ணை மறைத்து விட்டது என்பது தான் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அன்பை பரப்புங்க சார்
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இவ்வளவு பிரச்சனை வரும் சூழலில் அந்தப் பாடல் இல்லாமலேயே ஆவணப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா. இதைப் பார்த்த பிறகாவது தனுஷ் மனம் மாறலாம் என்றும் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனும் அன்பை பரப்புங்க சார்னு தனுஷை மறைமுகமாக விமர்சித்துள்ளாராம்.
தனுஷ் தொடர்ச்சியாகப் பழிவாங்கி வருகிறார் என்றும் அவர் மீது 3 பக்கத்திற்கு சரமாரியாகக் குற்றச்சாட்டு வைத்த போதிலும் பதிலுக்கு நயன்தாரா குறித்து தனுஷ் எதுவும் பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.