latest news
நீங்க கதறிட்டே இருங்க… தனுஷின் அடுத்தக்கட்ட பிளான் செமையா இருக்கே…
Dhanush: நடிகை நயன்தாரா தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட விளக்கம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்ற நிலை உருவாகி இருக்கிறது.
நடிகை நயன் தன்னுடைய கல்யாண டாக்குமெண்ட்ரிக்கு நானும் ரவுடித்தான் பாடல் மற்றும் சில காட்சிகள் வேண்டும் என்பதற்காக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் மட்டுமில்ல!. அல்லு அர்ஜூனையும் அசிங்கப்படுத்தும் நயன்!. வைரலாகும் வீடியோ!..
இதையடுத்து வெளியான நயன் டாக்குமெண்ட்ரி டிரெய்லரில் நானும் ரவுடித்தான் படத்தின் பிடிஎஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது வுண்டர்பார் பிலிம்ஸ் யூட்யூப் தளத்தில் சில வருடங்களாக இருப்பதாகவும் அதை அடுத்த 24 மணிநேரத்தில் எடுக்க வேண்டும் இல்லை என்றால் 10 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
தொடர்ந்து நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கடிதம் ஒன்றின் மூலம் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் இது தேவையான விஷயங்களை பேசியதை விட தனுஷ் மீது அவர் வீசிய துவேசம் ரசிகர்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு தனுஷ் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனக்கு அதெற்கெல்லாம் டைம் இல்லை என்னும் ரீதியில் தனுஷின் கால்ஷீட் ஃபுல்லாக இருக்கிறதாம். விடுதலை2 படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: Nayanthara: ‘சின்னவரிடம்’ சென்ற நயன் பஞ்சாயத்து?… தனுஷின் பதில் என்ன?
இதனால் அதன் ரிலீஸ் குறித்து அடுத்தக்கட்ட வேலை ஒரு பக்கம் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடித்து இயக்கும் இட்லி கடை திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல் சேகர் கம்முலு இயக்கத்தில் குபேரா படத்தின் டப்பிங் தொடங்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் முடித்துக்கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய டி55 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல் ஒரு பாலிவுட் படத்தின் ஷூட்டிங்கும் இருக்கும் என்பதால் இந்த பிரச்னையை தனுஷ் சைடில் தட்டி செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.