latest news
சூர்யாவை ஜீரோ ஆக்கிய ஜோதிகா.. கங்குவா படத்திற்கு மட்டும் பொங்கி எழுந்தது ஏன்?
கங்குவா படத்தை பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் கடுப்பான ஜோதிகா இன்று ஒரு பதிவை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது படத்தில் 30 நிமிட காட்சிதான் நன்றாக இல்லை. இரைச்சலும் அதிகமாகத்தான் இருந்தது. மற்ற படி ஒரு ரசிகையாக கேட்கிறேன்.ஏன் இந்தளவுக்கு எதிர்மறையான விமர்சனத்தை அள்ளிக் கொட்டுகின்றனர் என அவருடைய ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார்.
இதை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது சூர்யாவின் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கிறது.ஏன் ஜெய்பீம் படத்திற்கு ஏன் ஜோதிகா வாயை திறக்கவில்லை. இந்த கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் ஆவேசப்பட்டார்? ஏனெனில் ஜெய்பீம் படம் வரைக்கும் ஜோதிகா தமிழ் நாட்டில் இருந்தார். ஆனால் இப்போது மும்பையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: Nayanthara: இதுக்கு மேலயும் தனுஷ் அமைதியா இருப்பாரா? அடுத்த அடி எடுத்து வைத்த நயன்தாரா
அதுவும் உன்னை பெரிய பிராண்டாக மாற்றுகிறேன் என சொல்லி சூர்யாவையும் அழைத்துக் கொண்டு போய் சுத்தமா ஜீரோவாக்கியிருக்கிறார் ஜோதிகா. தமிழ் நாட்டில் இருந்த வரைக்கும் இது நம்ம பையன் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் மும்பைக்கு போன பிறகு சூர்யாவின் போக்கும் பேச்சும் மாறியது. ஆந்திராவில் போய் உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்னு என பேசுகிறார்.
ஒட்டுமொத்த குடும்பமே வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்ல. இதுல ஞானவேல்ராஜா ரொம்ப ஓவர். விஜய் ரசிகர்களை இல்லீகல் ஃபேன்ஸ் என ஒரு சமயம் கூறி கடும் விமர்சனத்திற்கும் ஆளானார். அதை போல் கார்த்தியும் ஆந்திராவில் எனக்கு பிடிச்ச ரசிகர்கள் ஆந்திரா ரசிகர்கள் என்று கூறியிருந்தார். இன்னொரு பக்கம் சிவக்குமார் மற்றவர்களின் போனை வாங்கி தூக்கி வீசுகிறார்.
இதையும் படிங்க: பல நடிகைகளுக்கு தொல்லை!.. அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கமாட்டாரு?!.. மீண்டும் சுசித்ரா!…
அதை போல் ஜோதிகாவும் ஒரு சமயம் மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். இப்படி இருந்தால் ரசிகர்கள் பொறுப்பார்களா? அவர்கள் கோபத்தைத்தான் காட்டுவார்கள். இதுல சிறுத்தை சிவா இந்தப் படம் மாதிரி என் கையில ஆறு கதைகள் இருக்கிறது என கூறியிருக்கிறார். இந்த ஒன்னுக்கே தாங்க முடியல. இன்னும் ஆறு கதைகள் என சொல்லி முழுவதுமாக உட்கார வச்சிராதீங்க.
மேலும் ஜோதிகா சொன்ன அந்த 30 நிமிட காட்சி என்பது ஹீரோயின் காட்சிதான். ஹீரோயின் வர சீன் நல்லா இல்லை. இதைத்தான் சொல்லியிருக்காரு. படம் பார்க்கும் போது கண்ணாடி கொடுக்கிறீங்க. அப்படியே டார்ச் லைட்டும் கொடுத்தால் டார்ச் அடிச்சுக்கிட்டே பார்க்க வசதியா இருக்கும். அந்தளவுக்கு படம் இருட்டா இருக்கிறது என மொத்த ஆவேசத்தையும் கொட்டி தீர்த்திருக்கிறார் சேகுவரா.