கையில் வீச்சருவாவுடன் ரத்தம் தெறிக்க.. என்ன இப்படி சண்டை போடுறாங்க?!.. டீசர் வீடியோ இதோ!..

Published on: November 18, 2024
---Advertisement---

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக டாப் நடிகையாக வலம் வருகின்றார். பல தடைகளை தாண்டி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் .

இதையும் படிங்க: பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..

தற்போது வரை 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாயின் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்று கொண்டார். தற்போது சினிமா, பிசினஸ், குழந்தைகள் வளர்ப்பு என அனைத்திலும் சிறந்த பெண்ணாக வலம் வருகின்றார். இன்று நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கின்றது.

இந்த ஆவணப் படத்தில் நடிகை நயன்தாராவின் சினிமா தொடங்கி தனது வாழ்க்கை மற்றும் காதல், திருமணம், குழந்தைகள் என அனைத்தையுமே பதிவிட்டு இருக்கின்றார். இந்த ஆவண படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கின்றார். மேலும் இன்று நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: சுந்தர் சி அடுத்த இயக்கப்போவது அரண்மனை 4 இல்லையாம்?!… அடடே இந்த சீரியஸுக்கு தாவிட்டாரே!…

இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு ராக்காயி என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. நடிகை நயன்தாரா இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கெட்டபில் கையில் அருவாளுடன் அனைவரையும் வெட்டி வீசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த டைட்டில் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் நடிகை நயன்தாரா எதிரிகளுடன் சண்டை போடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.