latest news
சூர்யாவை ஓகே பண்ணுறதுக்கு முன்னாடி இவருக்கு கதை சொன்னேன்.. ஆர்.ஜே.பாலாஜியின் திடீர் ட்விஸ்ட்..
RJ Balaji: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தொடங்கி தற்போது நடிகர் சூர்யாவை இயக்கும் நிலைக்கு வந்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரேடியோ ஜாக்கியாக இருந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றின் நடித்து வந்தார். தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இதையும் படிங்க: சுந்தர் சி அடுத்த இயக்கப்போவது அரண்மனை 4 இல்லையாம்?!… அடடே இந்த சீரியஸுக்கு தாவிட்டாரே!…
முதல் படமே நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை வாடிக்கையாக்கி கொண்டார். அந்த வகையில் ஆர்ஜே பாலாஜியின் படங்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிப்பில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வரும் ஆர்.ஜே பாலாஜி தற்போது நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
ட்ரீம்ஸ் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் டைட்டில் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் எனவும் ஆர் ஜே பாலாஜி தெரிவித்து இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் முதலில் இப்படத்தின் கதையை சூர்யாவிற்கு சொல்வதற்கு முன்னர் ஏ ஆர் ரகுமானை தான் சந்தித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..
நள்ளிரவில் தன்னுடைய இசையமைப்பு பணிகளை முடித்துவிட்டு ரகுமான் தூங்க செல்லும் முன்னர் காலையில் ஒரு மணி்நேரம் அப்பாயிண்மெண்ட் கொடுத்தார்களாம். 8.30க்கு சந்தித்து 40 நிமிடம் கதை சொல்லி இருக்கிறார் பாலாஜி. அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என ரகுமான் சந்தோஷமாக பேசினாலும் கடைசியில் ஒரு வாரம் டைம் வேண்டும் என்றாராம்.
ஆர்.ஜே.பாலாஜியோ கவலையாக வீடு திரும்ப இரண்டு நாட்களில் கால் வந்திருக்கிறது. நான் டைம் கேட்டதற்கு காரணம் உங்கள் படங்களில் நிறைய மியூசிக் இருக்கும். அதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடியும் சந்தேகம் இருந்தது. தற்போது அதற்கான வழியை பிடித்து விட்டேன் எனக் கூறி ஒப்புக்கொண்டாராம்.