கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலாவுக்கு… அடுத்த அறிக்கையுடன் வந்த பிரபல நடிகர்..

Published on: November 18, 2024
---Advertisement---

Bala:  தமிழ் சினிமாவில் தற்போது அறிக்கை காலம் போல. தினம் ஒரு  பிரபலம் இன்னொருவருக்கு அறிக்கை வெளியிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலாவிற்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா தனுஷ் இருக்கு எதிராக புகார் கடிதம் ஒன்றை வெளியிட்டார். நேற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிராக நடிகை ஜோதிகா கண்டன கடிதத்தை வெளியிட்டார். இந்நிலையில் இன்று பிரபல நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலாவிற்கு ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சாபம் கொடுக்குறீங்களே நீங்க என்ன கண்ணகியா?.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. நயனை விளாசிய பிரபலம்!..

ஆனால் கடந்த இரண்டு கடிதத்தை போல இது குற்றச்சாட்டு கடிதம் அல்ல. நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய வணங்கான் திரைப்படத்தின் ஷூட்டிங் பிரச்சினையால் திடீரென விலகினார். அதைத்தொடர்ந்து அப்படத்தில் அவருக்கு கேரக்டரில் நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானார். தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கு மூலம் பதிவை போட்டு இருக்கிறார். அதில், நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்களைக் கண்டு வியந்து இருக்கிறேன். உங்கள் படைப்பில் ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கினேன்.

இதையும் படிங்க: அனிருத் கொடுத்த அட்வைஸ்!… ஆர்.ஜே பாலாஜிக்கு கிடைத்த சூப்பர் படம்… இப்படி ஓபனா சொல்லிட்டாரே?…

Bala_Arun Vijay

என் பெற்றோரை பெருமை அடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் முக்கியமான பாகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்த சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நன்றிகள்.  மக்களுடன் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் அருண் விஜய் எனத் தெரிவித்து இருக்கிறார்.