படம் சுமாராவே இருக்கட்டும்! அதுக்கு இப்படியா? ‘கங்குவா’ விமர்சனத்தால் ஆவேசமான திருப்பூர் சுப்பிரமணியன்

Published on: November 18, 2024
kanguva
---Advertisement---

கங்குவா  படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தால் திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். அதாவது சமீபகாலமாக படம் ரிலீஸ் ஆகிற நாள்களில் நம் தமிழ்நாட்டிற்கு காலை 9 மணிக்கு தான் காட்சி ஆரம்பிக்கப்படுகிறது. வேற மாநிலங்களில் அதாவது கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 4 மணியாக காட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இதன் மூலம் நாமே கண்டண்ட்  கொடுத்து வருகிறோம்.  முதலில் அதை தடுத்து நிறுத்துங்கள். படம் ரிலீஸ் ஆகிறது என்றால் இந்தியாவின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுற மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும். இப்ப வரக்கூடிய விமர்சனங்கள் அதாவது மக்கள் வந்து படம் பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளாக என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

அது வேற. ஆனா ஏராளமான யூடியூப் சேனல் வந்ததற்கு அப்புறம் நெகட்டிவ் ரிவ்யூ போட்டால் தான் மக்கள் படிக்கிறார்கள் என சொல்லி படத்தை நாசமாக்கி விடுகிறார்கள். உதாரணத்திற்கு கங்குவா படத்தைப் பற்றி முதல் விமர்சனமாக வேறொரு மாநிலத்தில் இருந்து ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார். அவருடைய விமர்சனம் அவருடைய பார்வையில் அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம் .

எத்தனையோ படங்கள் எத்தனையோ பேருக்கு பிடிக்காமல் இருக்கிறது. என்னை பொறுத்த வரைக்கும் 44 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். எனக்கு வானமே இல்லை திரைப்படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் அதே படத்தின் 100-வது நாள் விழாவை ஈரோட்டில் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கு கே பாலச்சந்திரன் வந்திருந்தார் .

இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய சொன்னாதான் ரீச் ஆகுது?!.. கங்குவா படம் குறித்து நடிகர் சூரி சொன்ன விமர்சனம்!…

வானமே எல்லை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிடிக்காது என்பது என்னுடைய கருத்து. ஆனால் மக்களுக்கு அந்த படம் நல்ல முறையில் போய் சென்றடைந்திருக்கிறது. அதேபோல 16 வயதினிலே ,சேது போன்ற பல படங்கள் ரிலீஸ் ஆகி முதல் மூன்று நாட்கள் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று மூன்றாவது நாளிலிருந்து ஓடிய படங்கள் தான்.

kanguva
kanguva

ஏன் முதல் மரியாதை படத்தைக் கூட இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.அதனால் அந்த படத்திற்கு இசையமைப்பதற்காக பணம் கூட அவர் வாங்கவில்லை .ஆனால் முதல் மரியாதை படத்தை ஒட்டுமொத்த சினிமாவுமே கொண்டாடியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிகாலையில் படத்தை பார்த்ததுமே அந்த படம் காதறுந்து தொங்குது, காது வழியா ரத்தம் வருது, அப்படி இப்படி என வாய்க்கு வந்தபடி சொல்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு ஹீரோ புடிக்கலாம் புடிக்காமல் போகலாம். உண்மையிலேயே இந்த வருஷம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திரை துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் என இவர்களுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கின்றன. இந்தியன் 2 ,வேட்டையன், இன்று கங்குவா இந்த படங்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதையும் படிங்க: வெட்கம், மானம் இல்லையா?… தனுஷ் ராதிகாவை திட்டியதன் பின்னணி?!… வெளிவந்த உண்மை..!

இந்த மாதிரி இன்னும் பத்து படங்கள் என்னால் சொல்ல முடியும் .இது சமீபத்தில் ரிலீசான திரைப்படங்கள். இந்த படங்கள் எல்லாம் வசூலில் மிகப்பெரிய அளவில் குறைந்ததற்கு காரணமே இப்படிப்பட்ட விமர்சகர்கள் தான். தியேட்டருக்குள்ளேயே சென்று அதன் வளாகத்திற்குள் இரண்டு பேரை நிற்க வைத்து யாரோ இரண்டு ரசிகர்களை செட்டப் செய்து அவர்களை வைத்து படத்தை பற்றி தப்பு தப்பாக சொல்ல வைக்கின்றனர்.

கேரளாவில் ஒரு தயாரிப்பாளர் இதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார். அதாவது ஒரு படம் ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு படத்தை பற்றிய விமர்சனம் பொதுவெளியில் பரப்பக் கூடாது என கேட்டு நீதிமன்றம் வரை சென்று இருக்கிறார். அதைப்போல இந்த தமிழ்நாட்டிலும் அத்தனை தயாரிப்பாளர்களும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சினிமா நல்ல முறையில் வளர்ச்சி அடையும் என மிகவும் ஆவேசமாக பேசியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.