தளபதி69 படத்திற்கு இத்தனை இயக்குனர்களிடம் கதை கேட்டாரா தளபதி… லிஸ்ட்டில் இருந்தவரே சொல்லிட்டாரே…

Published on: November 18, 2024
thalapathy69
---Advertisement---

Thalapathy69: நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் கடைசி திரைப்படமான தளபதி69 திரைப்படத்துக்கு முன்னால் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்திற்காக 300 கோடி வரை சம்பளத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாபம் கொடுக்குறீங்களே நீங்க என்ன கண்ணகியா?.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. நயனை விளாசிய பிரபலம்!..

ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை முடித்துக்கொண்டு சினிமாவில் இருந்து மிகப்பெரிய இடைவேளையை விட இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு அரசியலை கணக்கிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பரபரப்பாக விஜய் வேலை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றால் மொத்தமாக அவர் சினிமாவில் இருந்து விலகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அவருடைய கடைசி திரைப்படமான தளபதி 69 ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. கடைசி திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொடுக்க வேண்டுமென விஜய் முடிவு எடுத்திருந்தார்.

அந்த வகையில் கடைசி திரைப்படத்திற்கு அவர் இயக்குனரை உடனே முடிவெடுத்து விடவில்லை. இணையதளங்களில் கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி பல இயக்குனர்களின் பெயர்கள் பட்டியலில் அடிபட்டது. வெற்றிமாறன், திரிவிக்ரம், ஆர்.ஜே.பாலாஜி என பலரும் இருந்தனர். 

இதையும் படிங்க: கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலாவுக்கு… அடுத்த அறிக்கையுடன் வந்த பிரபல நடிகர்..

பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஹெச். வினோத்தின் கதையை தளபதி ஓகே செய்திருப்பதில் இருந்து கண்டிப்பாக படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.