latest news
ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ்
நவம்பர் 14 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்திருந்த கங்குவா திரைப்படம் உலகெங்கிலும் ரிலீஸானது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் பல முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர். சூர்யாவின் கெரியரிலேயே கங்குவா திரைப்படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.
இனிமேலும் தேறாது: பட புரோமோஷனில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் படத்தைப் பற்றி மிகைப்படுத்தியே பேசி வந்தார்கள். இது மேலும் ரசிகர்களை அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்று வந்தது. மேலும் பெரிய டிஸ் ஆஸ்டர் என்றும் சொல்லப்படுகிறது. கங்குவா படத்தை பற்றிய சில தகவல்களை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: என்னது யூடியூபர்களால் சினிமா அழிகிறதா? திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய பிரபலம்
நயனால் தப்பிச்ச கங்குவா: படம் வெளியானதில் இருந்தே தொடர்ந்து கங்குவா படம் அதிக ட்ரோலுக்கு ஆளாகியது. நல்ல வேளைம்மா காப்பாத்துன என்பதை போல திடீரென நயன் போட்ட பதிவு அந்த ட்ரோலில் இருந்து கங்குவா படத்தை காப்பாற்றியது. நயன் போட்ட பதிவால் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் நயன் பக்கம் திரும்பியது. இருந்தாலும் கங்குவா இன்னும் பிக்கப் ஆகுறதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
ஆனால் சின்ன சின்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். முதலில் அந்த சத்தத்தை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். அதன் விளைவு நேற்று கங்குவா படம் புது பொலிவுடன் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கிடையில் அஜித் ஏதும் ஆறுதல் சொன்னாரா சிறுத்தை சிவாவுக்கு என்ற கேள்வியும் அந்தணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அந்தணன் , ஆறுதல் சொல்கிறாரோ இல்லையோ நிச்சயமாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவார் என்று கூறினார்.
இதையும் படிங்க: நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க முடியாது.. அடம் பிடித்த நடிகரிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்
சூர்யா போட்ட கோடி: கங்குவா படத்திற்காக ஞானவேல் ராஜா செமையாக மாட்டிக் கொண்டார் என்றும் அந்தணன் கூறினார். ஏனெனில் இந்தப் படத்திற்காக ஞானவேல் ராஜா 100 கோடி வெளியில் இருந்து கடன் வாங்கியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு 30 கோடி சம்பளமாம். அந்த 30 கோடியையும் சூர்யா படத்திற்காக கொடுக்க அதோடு 45 கோடியும் தந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் சூர்யா மட்டும் கங்குவா படத்திற்காக 75 கோடி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.