Connect with us
vijayserials

latest news

மாட்டிக்கிட்ட மனோஜ்… வசமாக சிக்கிய கோபி… காவல் நிலையம் வந்த ராஜி!..

Vijaytv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: முத்து எனக்கு என்ன லாபம் எனக் கேட்க அவரிடம் காசில்லை என சமாளித்து விடுகிறார். விஜயாவிடம் உங்களுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு என 10 ஆயிரத்தை கொடுக்கிறார். பின்னர் எல்லாரையும் சமாதானம் செய்து நடிக்க அழைத்து செல்கிறார். அவருடைய ஷோரூமில் அண்ணாமலை மற்றும் விஜயாவுடன் ரவி, ஸ்ருதி, மீனா மற்றும் முத்து நால்வரும் வந்து நடித்து கொடுக்க இருக்கின்றனர். 

இதையும் படிங்க: கங்குவா படத்தால் சூர்யா கேரியரில மாற்றம்… ரோலக்ஸ்ல நடிச்சாலும் சிக்கல் இருக்கு…! பிரபலம் சொல்லும் தகவல்

ஒருகட்டத்தில் அங்கு வந்த டைரக்டர் பொறுமை இழந்து கத்த ஓசியில் நடிக்க வந்த என்ன பேசுறீங்க என முத்து சத்தம் போடுகிறார். டைரக்டர் ஒருத்தருக்கு 25 ஆயிரம் கொடுத்தை சொல்லிவிடுகிறார். வீட்டில் மனோஜை ரவி மற்றும் முத்து கேள்வி கேட்க முடிச்சிட்டு தரலாம்னு இருந்தேனு சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி: வீட்டில் ராதிகா கோபமாக உட்கார்ந்து இருக்க அவர்  அம்மா என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறார். ராதிகா நான் எதுவும் செய்ய மாட்டேன் எனக் கூறிவிடுகிறார். பாக்கியா வீட்டில் எழில் உண்மையை சொல்ல பாக்கியா சமாதானம் செய்கிறார். ஈஸ்வரி கோபி விஷயம் எனக் கேட்க புகார் தான் என முடிவு என்கிறார்.

இதையும் படிங்க: ஒன் டே வில் கம்! கூப்பிட்டு வச்சு அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர்.. யார் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ராஜி கண்ணனை பார்த்துவிட அவரை துரத்தி கொண்டு செல்கிறார். ஆனால் கண்ணன் கையில் சிக்காமல் தப்பித்து விடுகிறார். ராஜி விழுந்துவிட அங்கு கூட்டம் கூட அப்போது கதிர் அங்கு வருகிறார். செந்தில் தேர்வறையில் இருக்க கண்காணிப்பாளர் அவரை வெளியில் பார்த்து கொண்டு இருப்பதற்கு கேட்கிறார்.

மீனா பற்றி கூற இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார். ராஜி மற்றும் கதிர் போலீஸில் புகார் கொடுக்க வர அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் கதிர் பேசி ராஜியை அழைத்துவந்து விடுகிறார். கண்ணன் என ஒருவரை ரோட்டில் ராஜி துரத்தி செல்கிறார்.

google news
Continue Reading

More in latest news

To Top