Keerthi suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த நிலையில் தற்போது அவரின் திருமண விவகாரத்தால் எல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வந்தார். அதிலும் விஜயுடன் அவர் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. பல மாதங்களாக கசிந்த இந்த தகவலுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
இதையும் படிங்க: கங்குவா படத்தால் சூர்யா கேரியரில மாற்றம்… ரோலக்ஸ்ல நடிச்சாலும் சிக்கல் இருக்கு…! பிரபலம் சொல்லும் தகவல்
விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவின் வீட்டில் கீர்த்தி சுரேஷ் தங்கி இருந்ததும், பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தும் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் எனக் கிசுகிசுக்கப்பட்டது. ஹீரோவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரளாவில் ரெஸ்டாரெண்ட் மற்றும் துபாயில் பிசினஸ் செய்து வரும் அந்தோணி தட்டில் என்பவரை கீர்த்தி மணக்க இருக்கிறாராம். இருவரும் கடந்த 15 வருடமாகவே காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்ட மனோஜ்… வசமாக சிக்கிய கோபி… காவல் நிலையம் வந்த ராஜி!..

9ந் தேதி நடக்க இருக்கும் நிச்சயத்தார்த்த நிகழ்வை தொடர்ந்து மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டு இருக்கிறதாம். மேலும், பிரபல நடிகர்களான விஜய், அட்லீ, சிவகார்த்திகேயன், பவன் கல்யாண், உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.





