Biggboss Tamil: வீட்டைவிட்டு ‘வெளியேறிய’ ரியாவின்… மொத்த ‘சம்பளம்’ இதுதான்?

Published on: November 19, 2024
riya
---Advertisement---

Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற ரியா தியாகராஜன் குறைந்த ஓட்டுகள் காரணமாக கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறினார். ரியாவை விட மோசமாக விளையாடி வரும் போட்டியாளர்கள் உள்ளே இருக்கும்போது அவரை வெளியே அனுப்பியது தவறு என ரசிகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், ‘கனத்த மனதுடன் இதனை பதிவு செய்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்கு நான் சென்றபோது பலரும் என்னிடம் உனக்கு என்று ஒரு பிஆர் டீமை உருவாக்கு என்று அட்வைஸ் செய்தனர்.

இதையும் படிங்க: அப்போ எல்லாம் பொய்யா கோபால்.. கீர்த்தியின் 15 வருட காதலர் இவர்தானாம்!..

ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. மக்கள் என்னை புரிந்துகொண்டு வாக்களித்தால் போதும் என்று நினைத்தேன். எனக்கு புகழ் இல்லாதது தான், நான் வெளியேற ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் மனதில் ஓடுகிறது.

என்னைப் போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வரக்கூடாதா? நாங்கள் விளையாட நினைக்கக் கூடாதா? ஏதேனும் தவறு நடந்தால் நீங்கள் ஆதரவு தர மாட்டீர்களா?’ என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ரியாவின் இந்த கூற்றினை ஆமோதித்து வருகின்றனர். இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் ரியா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. அந்தவகையில் மொத்தம் 14 நாட்கள் அவர் உள்ளே இருந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூபாய் 1.40 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.