latest news
அஜித், சூர்யா, தனுஷை ஓவர் டேக் செய்த எஸ்.கே!… அடுத்த விஜயா இல்ல சூப்பர்ஸ்டாரா?!…
Amaran: சினிமாவை பொறுத்தவரை எந்த நடிகரின் படம் எப்படி ஓடும் என கணிக்க முடியாது. அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் படம் வசூலில் மண்ணை கவ்வும். அறிமுக நடிகர் ஒருவர் நடிக்கும் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அதிக வசூலை பெற்றுவிடும். எந்த சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்பதுதில்தான் வெற்றி இருக்கிறது.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானது. இதில், அமரனும், லக்கி பாஸ்கரும் சூப்பர் ஹிட் அடித்தது. கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் உருவான அமரன் இதுவரை 300 கோடி வசூல் செய்துவிட்டது.
இதையும் படிங்க: அஜித் , விஜய், சூர்யா, பிரசாந்த் என அனைவரும் மிஸ் பண்ண ஒரே படம்.. நல்ல வேளை நடிக்கல
குறைந்த பட்ஜெட்டில் உருவான லக்கி பாஸ்கர் 100 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பிளடி பெக்கரும், பிரதர் படமும் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியிருக்கிறது. இந்த படங்களுக்கு முன் வெளியான வாழை, லப்பர் பந்து போன்ற படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எந்த படமும் செய்யாத வசூலை அமரன் படம் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் இது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதை என்பதால்தான். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இந்த படம் 300 கோடி வசூலை பெறும் என சிவகார்த்திகேயனே எதிர்பார்த்திருக்க மாட்டார். வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. அஜித்தின் துணிவு படம் கூட இந்த வசூலை பெறவில்லை. அதேபோல், தனுஷின் ராயன் படமும் இந்த வசூலை பெறவில்லை.
சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி 100 கோடியை தாண்டுமா என்பதே தெரியவில்லை. அதேபோல், ரஜினியின் வேட்டையன் படத்தை விட 2 மடங்கு வசூல் செய்திருக்கிறது அமரன். சிவகார்த்திகேயனை அடுத்த விஜய் என சிலர் பேச துவங்கி இருக்கும் நிலையில், ரஜினி படத்திற்கே டஃப் கொடுத்திருக்கிறார் எஸ்.கே. என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ்