உண்மை தெரியாம தப்பா பேசாதீங்க!.. ரஹ்மான் விஷயத்தில் பொங்கிய பிரபலம்..

Published on: November 19, 2024
nayanthara
---Advertisement---

கங்குவா படத்தின் கலவையான விமர்சனம் இணையத்தை முழுவதுமாக ஆட்கொண்ட போது திடீரென நயன் வெளியிட்ட அறிக்கை கங்குவா படத்தை மொத்தமாக ஓரங்கட்டியது. எங்கு திரும்பினாலும் நயனின் அந்த அறிக்கைதான் ஹைலைட்டாக இருந்தது. நயனின் ஆவணப் படம் ஒன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. நயனும் விக்கியும் சந்தித்துக் கொண்டதே நானும் ரவுடிதான் படத்தின் போதுதான்.

ஆரம்பத்தில் நட்பாக பழகிவந்தவர்கள் பின்னாளில் காதலர்களாக மாறினார்கள். இதனால் படப்பிடிப்பை நடத்துவதில் கொஞ்சம் தாமதப்படுத்தினாராம் விக்னேஷ் சிவன். இதனால் தயாரிப்பு தரப்பில் கொஞ்சம் அப்செட்டில் இருந்திருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் மிகவும் கோபமாகத்தான் இருந்தாராம் தனுஷ். 6 கோடி பட்ஜெட்டில் எடுக்க நினைத்து விக்னேஷ் சிவனின் கவனக் குறைவால் 17 கோடி வரை சென்றிருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியராஜ், பாண்டியராஜன் படங்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசம்… காணாமல் போக இதுவும் காரணமா?

அதுமட்டுமில்லாமல் படத்தில் இன்னொரு பாடல் எடுக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் சொல்ல அதுக்கு பணமெல்லாம் கொடுக்க முடியாது.எடுத்தவரைக்கும் போதும் என தனுஷ் சொல்லியிருக்கிறார். அதனால் அந்தப் பாடல்காட்சிக்கான செலவை நயன்தாராதான் ஏற்றுக் கொண்டாராம். இப்படித்தான் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது.

dhanush
dhanush

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். யாரடி மோகினி பட சமயத்தில் அந்தப் படமும் சூப்பர் ஹிட். அதனால் நயன்தாராவிடம் தனுஷ் வெற்றியை பகிர்ந்து கொள்ள என்ன வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு நயன்தாரா ‘இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை உதவி இயக்குனர்களுக்கும் ஒரு பைக் வாங்கிக் கொடுங்கள்’ என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித், சூர்யா, தனுஷை ஓவர் டேக் செய்த எஸ்.கே!… அடுத்த விஜயா இல்ல சூப்பர்ஸ்டாரா?!…

நயன் கேட்ட மாதிரி தனுஷ் அத்தனை உதவி இயக்குனர்களுக்காக பைக் வாங்கிக் கொடுத்திருக்கிறார் தனுஷ். விக்னேஷ் சிவன் வருவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன் மிகவும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நயன்தாராவும் அவரது வீட்டுக்கு தனுஷை அழைத்துச் சென்று தன் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறாராம். இப்படி ஒரு நல்ல நட்பு அவர்களுக்குள் இருந்திருக்கிறது. நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகுதான் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.