இன்டர்வியூ கொடுக்காதன்னு மிரட்டல்!… 25 கோடியில 10 கோடி கொடு?!… நயன்தாராவை விளாசிய பயில்வான்…!

Published on: November 19, 2024
nayan
---Advertisement---

நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து தனக்கு இன்டர்வியூ கொடுக்கக் கூடாது என்று மிரட்டல் வருவதாக நடிகை நயன்தாரா கூறியிருக்கின்றார்.

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் டாபிக் தான் செம வைரலாக போய்க்கொண்டிருக்கின்றது. நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் நானும் ரவுடிதான்.

இதையும் படிங்க: கவுண்டமணி கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டம்!.. இப்படி சொல்லிட்டாரே விஜயசாந்தி!…

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண தொடர்பான வீடியோ டாக்குமென்டரியாக வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வீடியோ எதுவும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து நயன்தாராவின் பிறந்த நாளான நேற்று இந்த ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நஷ்ட ஈடு கேட்டதாக கூறி மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சினிமா விமர்சகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து தன்னை பேட்டி கொடுக்கக் கூடாது என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். நான் எதற்காக இன்டர்வியூ கொடுக்கக் கூடாது. நான் கூறுவதில் எந்த தவறும் இல்லையே.

nayan
nayan

மேலும் நடிகை நயன்தாரா தனுஷிடம் சமாதானமாக பேசி இருக்கலாம். netflix தரப்பிலிருந்து இந்த டாக்குமெண்டரிக்காக கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் நடிகை நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பத்து கோடியை தனுஷுக்கு கொடுப்பதில் என்ன வருத்தம் இருக்கின்றது. அந்த படத்தின் மூலமாக தான் உங்கள் கணவர் இப்போது இவ்வளவு பெரிய இயக்குனராக மாறி இருக்கின்றார்.

அப்படி உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க விருப்பம் இல்லை என்றால் அவரிடம் சமாதானமாக பேசியிருக்கலாம். வெறும் மூன்று நொடிக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே என்று அவரிடம் பேசி இருந்தால் ஒரு சமரசம் கிடைத்திருக்க போகின்றது. அதற்காக இப்படியா சாபம் விடுவது போல் அறிக்கை வெளியிடுவது. அவர் உங்களை பழிக்கு பழி வாங்குவதாக கூறி இருக்கிறீர்கள்.

இதையும் படிங்க: கங்குவாவுக்காக ஜோதிகா போட்ட பந்து… அப்படியே ரிபீட்டாகி சிக்சர் ஆகிடுச்சே..! இதெல்லாம் தேவையா?

தனுசுக்கும் உங்களுக்கும் என்ன பழிக்கு பழி வேண்டி இருக்கின்றது. ஒரு படம் எடுப்பதற்கு எவ்வளவு செலவாகின்றது. பாடல் ஆசிரியருக்கு பணம் கொடுக்க வேண்டும், பாடல் எழுதியவருக்கு பணம் கொடுக்க வேண்டும், இசையமைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும், இவ்வளவு செலவு இருக்கின்றது ஒரு பாடலை எடுப்பதற்கு இது தயாரிப்பாளரான நடிகை நயன்தாராவுக்கு தெரியாதா? இரண்டு வருட காலதாமதத்திற்கு காரணம் netflix தான். அதையெல்லாம் விட்டுவிட்டு முழு பழியையும் தூக்கி தனுஷ் மீது போட்டு வருகிறார் நயன்தாரா’ என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கின்றார்

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.