சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இந்த அமுல் பேபி நடிகரா?!… எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே!…

Published on: November 19, 2024
sivakarthikeyan
---Advertisement---

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் ஜெயம் ரவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இன்றுடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: கவுண்டமணி கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டம்!.. இப்படி சொல்லிட்டாரே விஜயசாந்தி!…

இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களின் படங்களின் வசூலை முறியடித்து இருக்கின்றார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இயக்குனர்களின் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கின்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் முக்கியம் என்பதால் இதில் ஒரு ஸ்ட்ராங்கான நடிகர் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் தேடி வருகிறார்கள்.

jeyamravi
jeyamravi

முதலில் பகத் பாஸில் இப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவையே சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கு கதை கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விஷாலுக்கு கதையை கூறியதாகவும், அதை கேட்டு நடிகர் விஷாலும் முதலில் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் இப்படத்தில் நடிப்பதற்கு அவர் 18 கோடி சம்பளம் கேட்ட காரணத்தால் அந்த பேச்சுவார்த்தை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவிக்கு இப்படத்தின் கதையை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: இன்டர்வியூ கொடுக்காதன்னு மிரட்டல்!… 25 கோடியில 10 கோடி கொடு?!… நயன்தாராவை விளாசிய பயில்வான்…!

நடிகர் விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் கூட பரவாயில்லை. அமுல் பேபி போல் இருக்கும் நடிகர் ஜெயம் ரவி எப்படி வில்லனாக நடிப்பார். அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் ஜெயம் ரவியை சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பேட்டி எடுத்திருக்கின்றார். அப்படி இருக்கும் நிலையில் அவருடன் நடிப்பதற்கு ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு ஜெயம் ரவி ஒப்புக் கொள்வாரா? என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.