latest news
தயவுசெய்து மூளைய கழட்டி வச்சிட்டு படம் பார்க்க வாங்க.. கமல் படத்த கலாய்த்த இயக்குனர்
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டிருந்த உலக நாயகன் என்ற பட்டத்தை சமீபத்தில் தான் துறந்தார். இனிமேல் தன்னை உலக நாயகன் என்று யாரும் அழைக்க வேண்டாம் .கமல்ஹாசன் அல்லது KH என்று கூப்பிடவும் என்ற ஒரு அன்பான வேண்டுகோளையும் விடுத்திருந்தார் கமல்.
உலகநாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்ப 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தமிழ் திரை உலகில் ஏகப்பட்ட சாதனைகளை புரிந்தவர். இவருக்கு தெரியாத சினிமா நுணுக்கங்களே இல்லை. இப்போது கூட ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று இருக்கிறார் கமல். சினிமாவில் எந்த ஒரு தொழில்நுட்பம் அறிமுகமானாலும் அதை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்தும் பெருமை கமலை மட்டுமே சேரும்.
இதையும் படிங்க: ARRahman: இசைப்புயல் குடும்பத்தில் ‘வீசியது’ புயல்… விவகாரத்தை அறிவித்தார் மனைவி!
தன்னுடைய உழைப்பு அதன் மூலம் வந்த பணம் எல்லாவற்றையும் சினிமாவுக்காகவே போட்டிருக்கிறார் கமல். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் சினிமா சினிமா என்று அர்ப்பணித்து வருகிறார். இந்த நிலையில் கமல் நடித்த ஒரு படத்தை மொக்க சினிமா என விமர்சனம் செய்திருக்கிறார் பிரபல இயக்குனர். அவர் வேறு யாருமில்லை. எஜமான், சின்ன கவுண்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஆர் வி உதயகுமார்.
அவர் சொன்ன அந்த படம் சிங்காரவேலன் திரைப்படம் தான். அதை இயக்கியதும் உதயகுமார் தான். தற்போது ஒரு விழா மேடையில் சிங்காரவேலன் திரைப்படத்தைப் பற்றி தான் இந்த அளவு விமர்சித்திருக்கிறார் உதயகுமார். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் ரசனையை நம்மால் உணர முடியவில்லை என்று கூறிய அவர் மொக்க சினிமாவையே ஓட வைத்தவர்கள்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் சிங்காரவேலன் என அந்த படத்தை பற்றி கூறியிருந்தார் உதயக்குமார் .அந்த படம் எடுக்கும் பொழுது என்னிடம் கதையே கிடையாது. ஒரு சின்ன பிள்ளை உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவள் வளர்ந்து பெரியவளாகி அவளை திருமணம் செய்ய வேண்டும். இதுதான் அந்த படத்தின் ஒன் லைன் கதை.
இதையும் படிங்க: 300 கோடினா சும்மாவா? தட புடலாக பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்
இதை சொன்னதும் அந்த படத்தின் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் ஓகே என சொல்லிவிட்டார்கள். இதில் கமல் நடித்தது பெரிய விஷயம். அதனால் இந்த படத்தை அப்படி தான் எடுத்தோம். பீச் போகும் போது வெளியே அவுட்டிங் போகும் போது என படத்தின் கதையை டெவலப் செய்து அந்த படத்தை எடுத்தேன் .படம் ரிலீஸ் ஆகும் போது கூட ‘தயவுசெய்து இந்த படத்தை பார்க்க வருபவர்கள் மூளையை கழட்டி வச்சிட்டு வாங்க’ என அதில் போட்டு தான் படத்தை ரிலீஸ் செய்தேன்.
உடனே இளையராஜா ‘என்னையா இப்படி எழுதி வச்சிருக்க’ என்று கேட்டார். அதற்கு ‘பின்ன நாளைக்கு படத்தைப் பார்த்துட்டு எல்லாரும் என்ன திட்டினார்கள் என்றால் நான் என்ன பண்றது. அதனாலதான் ஆரம்பத்திலேயே இப்படி சொல்லி விட்டேன்’ என இந்த படத்தை பற்றி அந்த விழா மேடையில் பேசி இருந்தார் உதயக்குமார்.