பிறந்தநாளின் போது இப்படியா சாபம் விடுறது? அருண்விஜயை லெஃப்ட் ரைட் வாங்கிய வனிதா

Published on: November 20, 2024
arunvijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அருண் விஜய் .பிரபல குணச்சித்திர நடிகர் ஆன விஜயக்குமாருக்கும் அவருடைய முதல் மனைவியான முத்துகண்ணுவுக்கும் மகனாக பிறந்தவர் தான் அருண் விஜய். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் 1995 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து காத்திருந்த காதல்,,கங்கா கௌரி, பிரியம், துள்ளித் திரிந்த காலம், அன்புடன் என பல படங்களில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தாலும் சொல்லும் படியான ஒரு ஹீரோ அந்தஸ்து அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து பாண்டவர் பூமி என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் அருண் விஜய்.

இதையும் படிங்க: இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?

அதனைத் தொடர்ந்தும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைந்ததா என்றால் இல்லை.கொஞ்சம் காலம் சினிமாவை விட்டு விலகி இருந்ததைப் போல காணாமல் போயிருந்தார் அருண் விஜய். அப்பொழுதுதான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .அதுவும் விக்டர் என்ற ஒரு மாசான வில்லன் கதாபாத்திரம். மிகவும் ஸ்டைலாக நடித்திருந்தார் அருண் விஜய்.

அந்த படத்திற்கு பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் .அந்தப் படம் அருண் விஜய்க்கு ஒரு பெரிய சூப்பர் ஹிட் படமாக மாறியது. தற்போது பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

vanitha
vanitha

இதையும் படிங்க: ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்… கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?

அது பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படம் மட்டும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தால் அருண் விஜயின் கெரியரே மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது 47வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் .அவர் எப்பொழுதும் தனது பிறந்த நாளின் போது ரத்ததானம் கொடுப்பது வழக்கம். அதைப்போல நேற்று அவர் ரத்ததானம் கொடுத்திருந்தார்.

அதை டேக் செய்து அவருடைய சகோதரி வனிதா விஜயகுமார் இன்ஸ்டா ஸ்டோரியில் சாபம் விடுவது போல ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். வனிதா விஜயகுமாரும் விஜயகுமார் குடும்பமும் சில ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகின்றனர் .சொத்து பிரச்சினை காரணமாக விஜயகுமார் குடும்பத்திற்கும் வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வனிதா மட்டும் தற்போது தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் தான் அருண்விஜயின் அந்த ரத்த தானத்தை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா. நீங்கள் வெளியில் ரத்ததானம் கொடுப்பதற்கு முன்னாடி உங்களுடைய சொந்த இரத்தத்திற்கு கொடுக்க வேண்டிய நியாயமான உரிமையையும் சொத்தையும் கொடுங்கள். சொந்த ரத்தத்தோட சாபத்தை வச்சுக்கிட்டு மத்தவங்களோட புண்ணியத்தை தேடுவது வேஸ்ட் பிரதர் என பதிவிட்டு இருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.