A.R.Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து… 29 வருஷம் கழித்து ஏன் இந்த பிரிவு? பின்னணி இதுதான்..!

Published on: November 20, 2024
ARRahman sairabanu
---Advertisement---

ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் விவாகரத்து நடந்தது திரையுலகில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ‘மிஸ்டர் கிளீன்’ என்று அழைக்கப்படுபவர் தான் அவர். அந்தளவுக்கு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காதவர். ‘இசைப்புயல்’ என்று அவரை சொல்வார்கள். அப்படிப்பட்டவருக்கு ஏன் இந்த மாதிரி அவரது வாழ்க்கையில் புயல் வீசியது என்று பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

காதல் திருமணம்

Also read: ஜெயம் ரவி தொடங்கி ஏ.ஆர் ரகுமான் வரை!… 2024-ல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலங்கள்!…

ஏ.ஆர்.ரகுமான், சாய்ராபானு காதல் திருமணம் தான். அவங்க இருவரும் எக்மோர் பக்கத்தில் உள்ள ஒரு தர்ஹாவுல எதிர்பாராத விதமாக சந்திக்கிறாங்க. காதலை இருவரும் வெளிப்படுத்துறாங்க. அப்படித்தான் ஏ.ஆர்.ரகுமான் தன் விருப்பத்தை சொல்லவும் அம்மாவுடன் போய் சாய்ரா பானு வீட்டில் பேசி திருமணம் நடந்ததாம். இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று ரஹ்மானே எதிர்பார்க்கவில்லையாம்.

சொல்ல வேண்டிய அவசியம்

29 வருஷம் கழிச்சி இந்தப் பிரிவை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சொல்லாமலேயே இருந்துருக்கலாமே என ஒரு கேள்வி எழுந்தது. மனக்கசப்பு இருந்தால் சைலண்டா அவங்களுக்குப் பிடித்த இடத்தில் தங்கி இருக்கலாம். வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளையதலைமுறைக்கு திருமண வாழ்க்கையின் மீது மிகப்பெரிய ஒட்டுதல் இல்லாமல் வருகிறது. ரொம்ப ஈசியா கல்யாணம் பண்றாங்க. ரொம்ப ஈசியா டைவர்ஸ் பண்றாங்க.

இசை இசை தான்

ARRahman sairabanu
ARRahman sairabanu

சமீபகாலமாக முழுக்க முழுக்க இசை இசைன்னு ஓடிக்கிட்டே இருக்காரு. ரெட்ஹில்ஸ்ல மிகப்பெரிய ஸ்டூடியோவைக் கட்டி இருக்காரு. வெளிநாடுகள்ல இருக்குற மாதிரி ஹைடெக் விஷயங்கள் எல்லாம் இருக்கு. ஹாலிவுட் படத்தைக் கூட அங்க எடுக்க முடியும். அதுமட்டும் அல்லாமல் மிகப்பெரிய நிறுவனங்களோடு கைகோர்த்து புதிய புதிய பணிகளை எல்லாம் தொடங்கி இருக்காரு.

உடைந்த கண்ணாடித்துண்டுகள்

அவர் வீட்டுக்கு ஒரு போன் கூட அடிக்க முடியாத அளவு ஓடிக்கிட்டு இருக்காரு. வசதியான வாழ்க்கை வாழ்ற பலருக்கும் வரும் பிரச்சனை இதுதான். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவிட முடியவில்லை. இந்த நோட்டீஸ் குறித்து ஏ.ஆர்.ரகுமான் உடைந்த கண்ணாடித்துண்டுகள் இனி ஒட்டாது என்பது போல தெரிவித்துள்ளார்.

சோகத்துளிகள்

Also read: Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் ‘வைல்டு கார்டு’ போட்டியாளர்? .. சூடு பிடிக்குமா?!..

இந்த சோகத்துளிகள் விரைவில் மறைவதற்கும் வாய்ப்பு இருக்கு. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டு தான் உள்ளதாம். 29 வருஷத்துக்குப் பிறகு இப்படி விவாகரத்து அறிவித்தது இளையதலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். அதனால நீங்க மீண்டும் சேருவது தான் நலம் பயக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.