விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

Published on: November 20, 2024
arrahuman
---Advertisement---

சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா விவாகரத்து குறித்து பேசி இருப்பது தற்போது இணையதில் வைரலாகி வருகின்றது.

ஏ ஆர் ரகுமான்-சாய்ரா விவாகரத்து சமூக வலைதள பக்கங்களில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இசைப்புயல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவரது வாழ்க்கையில் தற்போது உண்மையாகவே புயல் அடித்துவிட்டது. நேற்று இரவு ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை இன்று காலை ஏ ஆர் ரகுமான் உறுதி செய்தார்.

இதையும் படிங்க: என்ன ஒரு அசாதாரண முயற்சி!… மேடி ட்விட்!… இந்த படத்தை காப்பாத்திடலாம்னு இன்னுமா நம்புறீங்க?!…

மனைவியை பிரிந்தது குறித்து ஏ ஆர் ரகுமான் ட்விட்டை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த ஜோடி பிரியும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். 29 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென்று தங்களது விவாகரத்தை அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் நேற்று சாய்ரா பானு தனது கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் தான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வந்தனா விவாகரத்து குறித்து பகிர்ந்து இருக்கின்றார். பிரபலங்களின் திருமண வாழ்க்கையில் அதிலும் பாலிவுட்டில் விவாகரத்துக்கு காரணம் கள்ளத்தொடர்பு கிடையாது. போர் அடிப்பது தான்.

ARRahman Sairabanu
ARRahman Sairabanu

பிரபலங்கள் ஒருவரை திருமணம் செய்து போர் அடித்தவுடன் அவரை பிரிந்து மற்றொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். One night stand எல்லாம் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. போரடிப்பதால் தான் உறவுகள் முறிந்து போகின்றது. பிரபலங்களின் வாழ்க்கை வித்தியாசமானது. மேலும் பல திருமணங்கள் செய்வது சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல, பெரும் பணக்கார குடும்பங்களிலும் இது நடக்கின்றது.

கணவர் அல்லது மனைவியின் அப்பா, சகோதரர், மாமனார் ஆகியோரால் பிரபலங்களின் வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கின்றது. இதனை பொதுவாக கூறினேன். அதற்காக ஏ ஆர் ரகுமானும் சாய்ரா பானுவும் பிரிவதற்கு கள்ளத்தொடர்பு காரணம் இல்லை’ என்று கூறி இருக்கின்றார்.

இதையும் படிங்க: என்ன ஒரு அசாதாரண முயற்சி!… மேடி ட்விட்!… இந்த படத்தை காப்பாத்திடலாம்னு இன்னுமா நம்புறீங்க?!…

அப்படி என்றால் இருவரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை போர் அடித்து விட்டதால் பிரிந்து விட்டார்களா? என்ன கொடுமை இது? என்று இசைப்புயலின் ரசிகர்கள் பலரும் புலம்பித் தவித்து வருகிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறீர்கள்.

உங்கள் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். இரண்டாவது மகளும் திருமண வயதில் இருக்கின்றார். அடுத்ததாக அமீனும் இருக்கின்றார். இப்படிப்பட்ட சமயத்தில் நீங்கள் விவாகரத்து செய்வது அவர்களுக்கு திருமணம் மீதான நம்பிக்கையை போக்கிவிடும் என்று ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.