முருகதாஸ் செய்த வேலை!.. வீட்டில் ஈ ஓட்டும் எஸ்.கே!.. அமரன் ஹிட்டுக்கு பின் இப்படியா?!…

Published on: November 20, 2024
sivakarthikeyan
---Advertisement---

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டில் ஒரு முக்கிய நடிகராக மாறியவர்தான் சிவகார்த்திகேயன். குறுகிய காலகட்டத்திலேயே சீனியார் நடிகர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியவர்.

ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார். காமெடி கலந்த காதல் கதைகள்தான் சிவகார்த்திகேயனின் ஸ்டைல். குறிப்பாக எஸ்.கே. படங்களில் சூரி நிச்சயம் இருப்பார். இருவரும் சேர்ந்து அடித்த லூட்டிகள் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

இதையும் படிங்க: Thalapathy 69: மீண்டும் விஜய்க்கு வில்லியா? செம காம்போ.. தளபதி 69 படத்தில் இணையும் அந்த நடிகை

ராஜ்குமார் பெரியசாமி நடிப்பில் எஸ்.கே.நடித்து வெளியான அமரன் படம் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமரன் அமைந்துவிட்டது. எனவே, சிவகார்த்திகேயனுக்கு அமரன் பட வசூல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

பொதுவாக ஒரு படம் பெரிய ஹிட் அடித்தால் அதனால் முதலில் பலனடைவது அப்படத்தின் ஹீரோதான். ஏனெனில் சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார்கள். சிவகார்த்திகேயனின் சம்பளம் 50 கோடியிலிருந்து பல கோடி ஏறியிருக்கும் என கணிக்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் கையில் இப்போது 3 படங்கள் இருக்கிறது.

Amaran
Amaran

ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருதால் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 2 மாதம் நடக்காது என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்காக தாடி வளர்த்திருக்கிறார் எஸ்.கே. அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் எஸ்.கே. நடிக்கப்போவது சாக்லேட் பாய் லுக்கில் என்பதால் முருகதஸ் படம் முடிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கே. நடிக்கவுள்ளது ஒரு பீரியட் படம். அதை துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும். எனவே,2 மாதங்கள் சிவகார்த்திகேயன் வீட்டில் சும்மாதான் இருப்பார் என்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.