கீர்த்தி சுரேஷை 3 நாள் டார்ச்சர் செய்த தனுஷ்!.. சூட்டிங்கில் நடந்த களேபரம்?!.. விளாசிய பிரபலம்!..

Published on: November 21, 2024
keerthi
---Advertisement---

தொடரி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷுக்கு டார்ச்சர் கொடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து தனது திரைப்படத்தை இயக்குவது, பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என்று கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றார். இவர் அமைதியாக இருந்தாலும் இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் மட்டுமே நிறைந்திருக்கும்.

இதையும் படிங்க: ரஹ்மான் திருமணம் காதல் திருமணமா? இந்த ஈகோ வேற இருந்துச்சா? பிரபலம் சொல்றத கேளுங்க

அந்த வகையில் தற்போது பூதாகரமாக வெடித்த விஷயம் தான் நயன்தாராவின் அறிக்கை. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து தனுஷை கிழித்து வருகிறார்கள் நயன்தாரா ரசிகர்கள். இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இட்லி கடை திரைப்படத்தை பேங்கில் படு விறுவிறுப்பாக எடுத்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் பிரபல விமர்சகரான அந்தணன் நடிகர் தனுஷ் குறித்து தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்ததில் பல உண்மைகள் இருக்கின்றது. அதில் அவர் தனுஷ் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகவும் பொய்யானது. ஆனால் அவரைப் பற்றி பேசி இருப்பது எல்லாம் உண்மைதான்.

dhanush
dhanush

அவர் வெளிவேஷம் போடக்கூடிய ஒரு நபர். தன்னை ஒரு புத்தர் போல் வெளியிடங்களில் காட்டிக் கொண்டும் மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கின்றார். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. அதற்கு பல சான்றுகள் இருக்கின்றது. அதில் ஒன்றை கூற வேண்டும் என்றால் தொடரி திரைப்படத்தில் நடந்த சம்பவத்தை சொல்லலாம். நடிகை கீர்த்தி சுரேஷ் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் தொடரி.

அந்த திரைப்படத்தில் ஏதோ ஒரு விஷயத்தை நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷிடம் கேட்டு இருக்கின்றார். அதற்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்த காரணத்தால் தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து வந்திருக்கிறார் தனுஷ். அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரயில் மேல்தான் எடுத்திருப்பார்கள். அப்போது கீர்த்தி சுரேஷை சரியாக நடிக்க விடாமல் தொல்லை செய்து இருக்கின்றார் தனுஷ்.

இதனால் ஒரு நாளைக்கு ஒரு காட்சி எடுப்பதற்கே பல டேக்குகள் போனது. மூன்று நாள் வரை சரியாக படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் அழுது கொண்டே கீர்த்தி சுரேஷ் தனது தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டார். அவரோ நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

இதையும் படிங்க: நான் நம்பும் ஒரே நடிகர் சியான் விக்ரம்!.. அட நம்ம கமலே இப்படி சொல்லிட்டரே!…

உடனே ரஜினிகாந்த் அவர்களுக்கு போன் செய்து விஷயத்தை கூற பிறகு அது தனுஷிற்கு சென்றது. அதற்கு பிறகு தான் அந்த திரைப்படத்தை எடுத்து முடித்தார்கள். தொடரி திரைப்படத்தை தான் நினைத்தது போல் பிரபு சாலமன் எடுக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்றே கூறலாம். இப்படி பல நடிகைகளுக்கு தொல்லை கொடுத்திருக்கின்றார் தனுஷ்’ என அவரைப் பற்றி பேசி இருக்கின்றார் அந்தணன்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.