Connect with us

latest news

இருக்கிற பிரச்னையில புதுசா ஆரம்பிக்கும் சின்மயி… நீங்க திருந்த வாய்ப்பே இல்லையா?

Chinmayi: தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள கணக்குகளில் அப்பாற்பட்டு சில விஷயங்களை பேசி அவ்வப்போது ரசிகர்களிடம் திட்டுவாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் முக்கியமானவர் பாடகி சின்மயி.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் சில பிரபலங்கள் அதை தங்களுடைய சமூகவலைதள கணக்குகளில் போடப்படும் பதிவால் இழப்பது என்னவோ வாடிக்கையாக மாறி இருக்கிறது. சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வந்த சுசித்ரா பிரபலங்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு சுசிலீக்ஸ் விவகாரத்தில் சிக்கினார்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 139 படத்தில் ஹீரோ அப்பா… 13 வருடத்தில் 36 படம் நடித்த ஹீரோ மகன்… யார் தெரிதா?

அதைத்தொடர்ந்து கொடுக்கும் பேட்டிகளில் பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதுபோல் முக்கிய பாடகியாக இருந்தவர் சின்மயி. இவர் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

அவர் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டதாக சின்மயியும் கூட இருந்தும் அவரை உங்களின் திருமணத்திற்கு ஏன் அழைத்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர். இந்த பிரச்சினைக்கு பின்னர் சின்மயி வாய்ப்பு நிறைய பறிபோனது.

இருந்தும் அவர் தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள கணக்குகளில் பெண்களுக்கு ஆதரவாக மிடூ விஷயங்கள் பேசி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது சின்மயி வெளியிட்டிருக்கும் பதிவில், தென்னிந்தியாவில் மிகவும் திறமையான மற்றும் பிரபலமான ஹீரோயினுக்கு போஸ்டரில் இன்னும் இடம் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருமகள் முதல் மூன்று முடிச்சு சன் டிவி தொடர்களின் புரோமோ அப்டேட்…

மேலும் அதில் மாரி படத்தின் ரவுடி பேபி போஸ்டரும், அமரன் படத்தின் போஸ்டரும் இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சின்மயி சொல்லுவது சாய் பல்லவி தான் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டனர். தொடர்ச்சியாக சாய் பல்லவி மற்றும் தனுஷ் இணைந்த போஸ்டர்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது என்பதை ஆதாரமாக ரசிகர்களை வெளியிட்டு வருகின்றனர்.

chinmayi

chinmayi

அமரன் திரைப்படத்தில் முக்கிய போஸ்டர்களில் சாய்பல்லவி இடம் பெற்று இருக்கிறார் என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. ஏற்கனவே கோலிவுட்டில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் நடந்து கொண்டு வரும் நிலையில் புதிய பிரச்சினையை சின்மயி எடுத்துக் கொண்டு வந்திருப்பது ரசிகர்களை கடுப்பேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top