கங்குவா ஓவர்!.. அடுத்து உனக்குதான் வெயிட்டிங்!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு காத்திருக்கும் ஆப்பு!…

Published on: November 21, 2024
rj balaji
---Advertisement---

கங்குவா திரைப்படத்தை ரசிகர்கள் முடித்துவிட்டு நிலையில் அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படத்திற்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வானொலியில் ஆர்ஜே வாக தன்னுடைய கெரியரை தொடங்கியவர் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருகின்றார். தமிழில் முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான ஆர்ஜே பாலாஜி .

இதையும் படிங்க: இருக்கிற பிரச்னையில புதுசா ஆரம்பிக்கும் சின்மயி… நீங்க திருந்த வாய்ப்பே இல்லையா?

அதனைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் காமெடி நன்றாக ஒர்க் அவுட்டான காரணத்தால் அடுத்தடுத்து திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரௌடி தான், ஜில் ஜங் ஜக்  போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் மாறினார். அதனை தொடர்ந்து வீட்டில் விசேஷம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தன்னுடைய இயக்கம் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.

sorgavasal
sorgavasal

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எஸ்ஆர் பிரபு தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கின்றார். பொதுவாக ஆர்.ஜே பாலாஜி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அவ்வபோது சில கருத்துக்களை சொல்லுவார். தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஒரு கூட்டமே காத்திருக்கின்றதாம்.

எப்படி சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை பேசியே முடித்து விட்டார்களோ அதுபோல ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படத்திற்காகவும் காத்திருக்கிறார்களாம். அவர் முன்னால் பேசிய அரசியலுக்காக அவரின் திரைப்படத்தை வச்சு செய்வதற்காக காத்திருப்பதாக தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க: அடுத்தவன் பாட்ட ஆட்டய போட்ட நயன்!.. நீங்க என்ன ஒழுங்கா?!.. வெளுக்கும் நெட்டிசன்கள்!..

அது மட்டுமா இவர் தற்போது சூர்யாவை வைத்து தான் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி சூர்யாவின் உயரம் குறித்து பேசியது மிகவும் சர்ச்சையானது. ஆனால் அதையே சூர்யா மறந்துவிட்டு தற்போது ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து படம் செய்வதற்கு தயாரான நிலையில் சில விமர்சனக் கூட்டங்களுக்கு இன்னும் அந்த பக்குவம் வரவில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.