Pushpa2: தமிழ் மொழிதான் எப்பவும் சூப்பர்!.. மனம் விட்டு பாராட்டும் புஷ்பா பட ஹீரோ..

Published on: November 21, 2024
pushpa2
---Advertisement---

Pushpa 2: தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் அப்பா தயாரிப்பாளர் என்பதால் மிகவும் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர். எல்லா தெலுங்கு அறிமுக நடிகர்கள் போலவே அல்லு அர்ஜுனும் காதல் கலந்த அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே ஆந்திராவில் உண்டு. புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா ஸ்டாராக மாறினார் அல்லு அர்ஜூன். ஏனெனில், அந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது.

இதையும் படிங்க: கங்குவா ஓவர்!.. அடுத்து உனக்குதான் வெயிட்டிங்!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு காத்திருக்கும் ஆப்பு!…

செம்மரக்கட்டை கடத்திலில் இருக்கும் போட்டிகள், மோசடி, அரசியல், லஞ்சம் என எல்லாமே இந்த படத்தில் பேசப்பட்டிருந்தது. புதிய கதைக்களத்தில் காதல், செண்டிமெண்ட் மற்றும் பக்கா ஆக்சனோடு இப்படம் உருவாக்கப்பட்டிருந்ததால் எல்லா தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.

முதல் பாகம் ஹிட் அடிக்கவே இரண்டாம் பாகத்தை 500 கோடி வரை செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் சில வில்லன்கள் இருந்தாலும் பஹத் பாசில் முக்கிய வில்லனாக இருப்பார் என்பது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. டிசம்பர் 5ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

pushpa
#image_title

கண்டிப்பாக புஷ்பா 2 படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசியுள்ள அல்லு அர்ஜூன் ‘எனக்கு தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் நன்றாக தெரியும். எல்லா மொழியிலும் உருவாகும் புஷ்பா பட டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களை பார்த்தேன். அதில் தமிழ் மொழியில்தான் மிகவும் கச்சிதமாக டப்பிங் செய்திருப்பார்கள். தெலுங்கு மொழியில் ஒரு நுணுக்கம் இருக்கும் அதை தமிழில் அவ்வளவு நுணுக்கமாக செய்திருப்பார்கள்’ என பாராட்டி இருக்கிறார்.

புஷ்பா படம் வெளியான போதும் ‘மற்ற மொழிகளை விட தமிழில் மிகவும் சிறப்பாக டப்பிங் செய்திருந்தார்கள்’ என அல்லு அர்ஜுன் பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க: இருக்கிற பிரச்னையில புதுசா ஆரம்பிக்கும் சின்மயி… நீங்க திருந்த வாய்ப்பே இல்லையா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.