புஷ்பா 2-வில் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ‘சம்பளம்’ எவ்வளவு தெரியுமா?

Published on: November 22, 2024
pushpa2
---Advertisement---

Pushpa 2: வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

முதல் பாகம் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து 2 வருடங்கள் ஜவ்வாக இழுத்து இப்படத்தின் 2-வது பாகத்தினை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் சமந்தா ஊ சொல்றியா என குத்தாட்டம் போட்டிருந்தார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் சுடசுட அப்டேட்… இன்னுமா முடியலை…

இரண்டாவது பாகத்தில் இளம்நடிகை ஸ்ரீலீலாவை ஆட விட்டுள்ளனர். உலக தொலைகாட்சி உரிமை, மியூசிக் உரிமை, ஓடிடி உரிமை என படம் வெளியாகும் முன்னரே படம் பெரிய தொகையினை வசூலித்து விட்டது.இதற்கு மேல் வரும் பணம் போனஸ்தான். இந்தநிலையில் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா இருவரின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து பஹத் பாசில் ரூபாய் 10.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். இதேபோல ராஷ்மிகா மந்தனா ரூபாய் 1௦ கோடி சம்பளமாக இரண்டு பாகங்களுக்கும் பெற்று உள்ளார். படம் ஆரம்பிக்கும் போது இது இவ்வளவு பெரிய வரவேற்பினை பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் முதல் பாகத்திற்கு குறைவாக தான் சம்பளம் பெற்றுள்ளனர்.

pushpa
#image_title

தற்போது பேன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியாவதால் இரண்டாவது பாகத்திற்கு அனைத்து நட்சத்திரங்களும் கூடுதலாக சம்பளம் பெற்று இருக்கின்றனர். எது எப்படியோ படத்தின் பிசினஸ் முடிந்து தயாரிப்பாளருக்கு லாபமும் கிடைத்து விட்டதால் படத்தில் பணியாற்றிய அனைவருமே ஹேப்பி மோடில் உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் 69 படத்தில் சத்யராஜிக்குப் பதிலாக அந்த நடிகரா? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.