ரஹ்மான் கிடைச்சது பெரிய பாக்கியம்.. சாயிராவுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த இயக்குனர்

Published on: November 22, 2024
rahman 1
---Advertisement---

ரஹ்மான் மற்றும் சாயிரா விவாகரத்து தற்போது சினிமாவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகால வாழ்க்கை. யாரும் எதிர்பாராத ஒரு முடிவு. இது சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் விவாகரத்து பிரச்சினை பற்றி பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அவருடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

ரட்சகன், ஜோடி போன்ற இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படங்களை இயக்கியவர்தான் பிரவீன் காந்தி. இந்த இரு படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ரஹ்மான் மாதிரி ஒரு உன்னதமான மனிதரை பார்க்க முடியாது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். மிகவும் மென்மையானவர்.

இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே முதல் மருமகள் வரை… டிஆர்பியில் பட்டைய கிளப்பும் சீரியல்களின் புரோமோ!..

இதுவரை அவரைப் பற்றி எந்தவொரு கிசுகிசுக்களும் வந்ததில்லை. அவருக்கே இப்படி ஒரு பிரச்சினை எனும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எத்தனையோ ஜோடிகளை சேர்த்து வைத்தவர் ரஹ்மான். அதாவது ஜோடி படம் பார்த்து நிறைய ஜோடிகள் சேர்ந்தார்களாம். அதற்கு காரணம் ஜோடி படத்தில் அமைந்த பாடல்கள்தான். அதனால்தான் மற்ற ஜோடிகளை சேர்த்து வைத்தது அவரது இசையில் அமைந்த பாடல்கள்.

praveen gandhi
praveen gandhi

ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடலின் பல்லவியை எழுதிக் கொடுத்ததே ரஹ்மான்தான். அதை வைத்து மீதமுள்ள வரிகளை எழுதியவர் வைரமுத்து. `90கள் காலத்தில் ஹிந்தியிலும் நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். அந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் ஹிந்தியில் பிரபலமான நடிகர்களான அமீர் கான், சல்மான் கான் என ஒட்டுமொத்த பாலிவுட்டும் அவருக்காக அவருடைய வீட்டில் கீழே காத்திருப்பார்கள்.

சாயிரா துபாயை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஹிந்தி தெரியும். அதனால் ஹிந்தி நடிகர்களை பற்றி கேள்விதான் பட்டிருப்பார். ஆனால் தன் கணவர் மூலமாக அனைவரையும் ஒட்டுமொத்தமாக தன் வீட்டில் பார்ப்பது எவ்வளவு பெரிய விஷயம். மேலும் அவர் இசையில் வரும் பாடல்கள் நமக்கு லேட்டாகத்தான் வரும். ஆனால் முதலில் அதை கேட்பது அவரது மனைவியாகத்தான் இருக்க முடியும்.

இதையும் படிங்க: எங்க அப்பா ஒரு லெஜண்ட்!… தவறான தகவல் வேதனையளிக்கிறது.. ஏ.ஆர் ரகுமான் மகன் உருக்கம்!…

இதை விட பெரிய பாக்கியம் என்னவாக இருக்க முடியும். அவர் இசையமைப்பதை கேட்டாலே போதுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ரஹ்மான் போன்ற ஒரு மென்மையானவருக்கே இந்த நிலைமை என்றால் பெண்களுக்கு என்னதான் வேண்டும். பயமாகத்தான் இருக்கிறது. அதனால் சாயிரா இதை மீண்டும் கருத்தில் கொண்டு ரஹ்மானுடன் சேர்ந்து வாழ வேண்டும். அதுமட்டும் நடந்தால் ஆஸ்கார் விருது வாங்கும் போது நாம் எவ்வளவு சந்தோஷப்பட்டோமோ அதை விட பெரிய சந்தோஷமாக இருக்கும் என பிரவீன் காந்தி கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.