பாலிவுட்டிலே டேரா போட்ட அட்லீ!.. அடுத்த படம் இந்த கான் நடிகருடனா?!.. அதிர்ஷ்டக்காத்து பிச்சிக்கிட்டு அடிக்குதே!…

Published on: November 22, 2024
bollywood
---Advertisement---

இயக்குனர் அட்லீ அடுத்ததாக சல்மான் கான் அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் இயக்குனர் அட்லி. இவர் ஷங்கரின் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருக்கின்றார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து நடிகர் விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படிங்க: நான் சரக்கடிக்கிறதை நிறுத்திட்டேன்!.. காரணம் இதுதான்!.. ஓப்பனா பேசிய விஜய் ஆண்டனி!..

தமிழ் சினிமாவில் 4 படங்களில் மிகப்பெரிய இயக்குனராக மாறிய அட்லீ. அதனை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. பாலிவுட்டில் வசூலையும் வாரி குவித்தது. உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்று விட்டார்.

பல பாலிவுட் நடிகர்கள் அட்லீக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் அட்லீ அடுத்ததாக சல்மான் கான் அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப் போகின்றார் என்கின்ற தகவல் வெளியாகி இருந்தது.

atlee
atlee

பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த நிலையில் அடுத்ததாக சல்மான் கானை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். அட்லீ சமீப நாட்களாக பாலிவுட் சினிமாவில் வலம் வருகின்றார். குடும்பத்துடன் மும்பைக்கே சென்று அவர் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். இனிமேல் அவர் பாலிவுட்டில் தான் படத்தை இயக்கப் போகின்றார் என்றும் கூறி வருகிறார்கள்.

சல்மான் கான் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அட்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அட்லி இயக்கத்தில் இந்த திரைப்படம் ஒரு பேண்டஸி பீரியட் படமாக இருக்கும் எனவும், கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் நடக்கும் டைம் லைனை வைத்து மெகா பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: ரஹ்மான் கிடைச்சது பெரிய பாக்கியம்.. சாயிராவுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த இயக்குனர்

அது மட்டும் இல்லாமல் இது டூயல் ஹீரோ படம் என்பதால் மற்றொரு ஹீரோவுக்காக கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மே மாதம் தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.