கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு… சிறகடிக்க ஆசை ஹீரோவின் ‘திருமண’ தேதி இதுதான்!

Published on: November 22, 2024
sirakadikka aasai
---Advertisement---

இந்தியா முழுவதும் இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற இருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கனக்கான திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுகின்றன.

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தாண்டு திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றனர். அதில் பலரும் என்ன இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா ? என்று ரசிகர்களே கேள்வி எழுப்பும் அளவிற்கு உள்ளன.

இந்த திருமண லிஸ்டில் சமீபமாக இணைந்திருப்பவர் சீரியல் ஹீரோ வெற்றி வசந்த். விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் சிறககடிக்க ஆசை சீரியலும் ஒன்று. சொல்லப்போனால் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர்.

நாயகன் வெற்றி வசந்தின் நடிப்பும் இதற்கு முக்கிய காரணமாகும். சமீபத்தில் வெற்றி வசந்த் சீரியல் நடிகை வைஷ்ணவியை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து தள்ளி விட்டனர்.

இந்தநிலையில் இவர்களின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற 28ம் தேதி வெற்றி வசந்த் – வைஷ்ணவி திருமணம் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.

தற்போது இவர்களின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இருவருக்கும் தற்போது தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் புது மாப்பிள்ளை ஆகப்போகும் நாயகன் வெற்றி வசந்திற்கு வாழ்த்துகள்!

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.