
Cinema News
படம் பார்க்கும்போதே அந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும்னு ஆசை… SK.சொன்ன பிளாஷ்பேக்
தமிழ்த்திரை உலகில் வேக வேகமாக முன்னேறி வரும் நடிகர் சிவகார்த்திகேயன். அஜீத், விஜய்க்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டார். கோட் படத்தில் துப்பாக்கியைப் பிடிங்க என்று விஜய் சொன்ன அந்த சீனில் இருந்து சிவகார்த்திகேயன் வேற லெவலுக்குச் சென்று விட்டார்.
அது மட்டுமல்லாமல் அதன்பிறகு கமல் தயாரிப்பில் வெளியான அமரன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது.
Also read: Thalapathy 69: ‘தளபதி 69’ 500 கோடி பட்ஜெட்டா? கேட்டாலே தலை சுத்துதே.. தயாரிப்பாளர் போட்ட கணக்கு
இவர் கதைகளை எப்படி தேர்வு செய்கிறார்? இப்படிப்பட்ட நல்ல படங்களை அவரால் எப்படி தேர்ந்தெடுக்க முடிகிறது? குறிப்பாக மாவீரன், டாக்டர் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதையும் சிவகார்த்திகேயன் இப்படி சொல்கிறார்.
வாய்ப்பு
இதில் என்னவொரு ஆச்சரியம் என்றால் மேனேஜரே இல்லையாம். ஆனாலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு யார் மூலம் வருகிறது என்று பார்த்தால் இவர் சொல்லப் போய்த் தான் தெரிகிறது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
மேனேஜர் இல்லை
எனக்கு மேனேஜரே கிடையாது. என்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தவர்கள் இண்டஸ்ட்ரில என்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் மூலமாகத் தான் வருவார்கள். மடோன் அஸ்வினோட மீட்டிங் அருண் விஸ்வா மூலமாகத் தான் நடந்தது. அதே மாதிரி நெல்சனைப் பொருத்தவரைக்கும், நாங்க ரொம்ப வருஷமா பிரண்ட்ஸ்.
ஒர்க் பண்ணனும்
இந்த மாதிரி ஒவ்வொருத்தரோட ஒவ்வொரு மாதிரியான பழக்கம். மடோன் அஸ்வினுடன் ஒர்க் பண்ணதுக்கு காரணம் மண்டேலா படம் தான். மண்டேலா பார்த்துட்டு இருக்கும்போதே 48வது நிமிஷத்திலேயே அவரோட ஒர்க் பண்ணனும்னு எனக்கு தோணுச்சு என்கிறார் எஸ்.கே.
மாவீரன், டாக்டர்

Maveeran
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின். இவருடன் சிவகார்த்திகேயன் இணைந்து பணிபுரிந்த படம் மாவீரன். அதே போல சிவகார்த்திகேயனின் நண்பரான நெல்சன் திலீப்குமாருடன் அவர் இணைந்து பணிபுரிந்த படம் டாக்டர். இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.