Connect with us
nagarjuna

Cinema News

அவர் ‘Gen Z’ டைரக்டர்லாம் கிடையாது?!.. என்னப்பா லோகேஷ் பத்தி இப்படி சொல்லிட்டாரு நாகார்ஜுனா!…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் நாகார்ஜுனா சமீபத்திய பேட்டியில் பேசிய தகவல் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் மாநகரம் திரைப்படத்தை இயக்கி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு அனைத்துமே வெற்றி படங்கள்தான். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்.

இதையும் படிங்க: ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தி கானா பாடல்!… பா.ரஞ்சித், இசைவாணி மீது பாய்ந்த வழக்கு!…

தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வருடம் மே மாதம் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. கூலி திரைப்படத்தில் பேன் இந்தியா நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

தெலுங்கு சினிமா பிரபலம் நாகார்ஜுனா, கன்னட சினிமா பிரபலம் உபேந்திரா, மலையாள சினிமா பிரபலம் ஷாஹித் ஷாகிர் மற்றும் தமிழ் சினிமாவில் சத்யராஜ் என ஒரு மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து இருக்கின்றது.

nagajuna

nagajuna

கமலஹாசன் அவர்களுக்கு விக்ரம் திரைப்படம் எப்படி ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருந்ததோ? அதேபோல் ரஜினிகாந்த் அவர்களுக்கு கூலி படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். நடிகர் நாகார்ஜுனா கூலி திரைப்படத்தில் சைமன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்த வருகிறேன். அவர் ஒரு Gen Z இயக்குனர் கிடையாது. ஆனால் நிச்சயம் அவரை Gen Z இயக்குனர் என்று தான் நான் கூறுவேன். அப்படியான ஒரு மிகச்சிறந்த இயக்குனர். புதிய வடிவிலான ஒரு ஃபிலிம் மேக்கிங்கை அவரிடத்தில் என்னால் பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: சும்மா வரல சினிமாவுக்கு… அடேங்கப்பா ஜி.வி.பிரகாஷ்குமாரோட அனுபவத்தைப் பாருங்க…!

அவரின் திரைக்கதை, கதாபாத்திரத்தை வடிவமைப்பது, படம் எடுக்கும் ஸ்டைல் அனைத்துமே மிகப் பிரமாதமாக இருக்கின்றது. அவருடைய திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு சுதந்திரம் இருக்கின்றது. படத்தில் இருக்கும் ஹீரோ, வில்லன் கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறமாட்டார். அவர் கொடுக்குற சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று பகிர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் குபேரா திரைப்படத்தில் நடிப்பது குறித்தும் பகிர்ந்திருந்தார். சேகர் கமுலாவின் இயக்கம் ஒரு புது வகையான பிலிம் மேக்கிங் என்று கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top