சமந்தாவுக்கும் இப்படித்தான் செஞ்சீங்க… நாக சைத்தன்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Published on: November 23, 2024
nagachaitanya
---Advertisement---

டோலிவுட்டின் இளம் ஹீரோ நாக சைதன்யா தன்னுடைய அடுத்த திருமணத்திற்கு கோலாகலமாக தயாராகி விட்டார். இவரின் முதல் மனைவி சமந்தாவை பிரிந்து ஒரு வருடத்தில் அடுத்த காதலுக்கு தயாராகி விட்டார். மீண்டும் நடிகையுடன் காதல் வயப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை டேட்டிங் செய்து தற்போது அடுத்த மாதம் திருமணமும் செய்ய போகின்றனர்.

தன்னுடைய சமூக வலைதளத்தில் சமந்தாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினாலும் ஒரு படம் மட்டும் விட்டு வைத்திருந்தார். சோபிதா துலிபாலாவுடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அந்த புகைப்படத்தையும் நீக்கி விட்டார்.

இதையும் படிங்க: சும்மா வரல சினிமாவுக்கு… அடேங்கப்பா ஜி.வி.பிரகாஷ்குமாரோட அனுபவத்தைப் பாருங்க…!

முன்னதாக ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால் அது ராசியில்லை என்று நினைத்தார்களோ என்னவோ தற்போது ஹைதராபாத்தில் செட் போட்டு பிரமாண்டமாக திருமணத்தை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

தந்தை நாகார்ஜுனா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு அமலாவை மணந்தார். இத்தனைக்கும் அவரின் மனைவி நடிகர் வெங்கடேஷின் சகோதரி. தற்போது அதேபோல பிள்ளையும் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு சோபிதவுடன் இரண்டாவது கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டார்.

naga chaitanya
#image_title

இந்தநிலையில் திருமணத்திற்கு முன்பாக நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரும் கரம்கோர்த்து பொதுவெளியில் நடந்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் சைதன்யா கோட் சூட்டிலும், சோபிதா கவுன் போன்ற உடையிலும் முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க நடந்து வருகின்றனர்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘சமந்தாவுடனும் இதுபோல தான் நடந்து வந்தார். கடைசியில் என்ன ஆனது?’ என்று காட்டமாக அவரை விமர்சித்து வருகின்றனர். வேறு சிலரோ, ‘சமந்தா இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. ஆனால் மனுஷன் ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்’ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: படம் பார்க்கும்போதே அந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும்னு ஆசை… SK.சொன்ன பிளாஷ்பேக்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.