‘அந்த’ நடிகையா இவங்க… லேட்டஸ்ட் வீடியோ பார்த்து ‘ஷாக்கில்’ ரசிகர்கள்! ..

Published on: November 23, 2024
unni menon
---Advertisement---

தமிழ் சினிமாவில் என்னதான் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. தற்போதும் எவர்கிரீன் ஹீரோயின்கள் மீண்டும் வந்து தங்களுக்கு ஏற்ற வேடங்களில் நடித்து மனதை கவர்கின்றனர்.

சிம்ரன், ஜோதிகா, மீனா, தேவயானி, குஷ்பூ, சினேகா, மஞ்சு வாரியர் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. கதைக்கு அழுத்தமான வேடங்களில் நடித்திட மேற்கண்ட நடிகைகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படிங்க: சமந்தாவுக்கும் இப்படித்தான் செஞ்சீங்க… நாக சைத்தன்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

ஆனால் சில நடிகைகள் குறிப்பிட்ட படங்களுக்கு பிறகு திரையுலகில் இருந்து காணாமல் போய் விடுகின்றனர். அதற்கு பிறகு ஏதாவது வீடியோவில் அவர்களை பார்க்கும்போது அவங்களா இவங்க என ரசிகர்கள் அதிர்ச்சி அடைவது நடக்கிறது. அந்தவகையில் நடிகை திவ்யா உன்னியின் லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

divya
#image_title

யாரோ ஒருவர் என்று முதலில் பார்த்தாலும் கடைசியில் அட இவங்க திவ்யா உன்னி தானே என்று ஆச்சரியம் எழுகிறது. இதற்கு முன்னும் குண்டாக இருந்ததில்லை என்றாலும் தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார்.

திவ்யா உன்னி தமிழில் கார்த்திக் உடன் கண்ணன் வருவான், பார்த்திபன் உடன் சபாஷ், ராம்கியுடன் பாளையத்து அம்மன், அர்ஜுனின் வேதம், ஆண்டான் அடிமை ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வந்த திவ்யா உன்னி 2006ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. சுமார் 18 வருடங்களுக்கும் மேலாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.