Cinema News
‘கங்குவா’ படத்துக்கு விதை நான் போட்டது.. யாராச்சும் இத செஞ்சீங்களா? ஆவேசமான கூல் சுரேஷ்
கடந்த 14 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸானது. பல கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பல மொழிகளில் படம் தயாரானது. படம் ரிலீஸூக்கு முன்பே கண்டிப்பாக படம் 2000 கோடி வசூலை அள்ளும் என ஞானவேல்ராஜா கூறினார்.
மேலும் இந்தப் படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாகவும் அமையும் என சிறுத்தை சிவா கூறியிருந்தார். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்கு நூறாக்கியது.ஏகப்பட்ட மீம்ஸ்களுக்கு படம் ஆளானது. படத்தை இந்தளவுக்கு கஷ்டப்பட்டு எடுத்தும் ஒரு பிரயோஜனும் இல்லாமம் போனது. இதனால் ஜோதிகா கோபத்தி66
3ல் கொதித்தெழுந்தார்.
இன்னொரு பக்கம் கூல் சுரேஷும் கங்குவா படத்தை பற்றி விமர்சித்தவர்களை ஆவேசமாக திட்டி பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று காக்கா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதற்கு கூல் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது கங்குவா படத்தால் தான் பட்ட கஷ்டத்தையும் எடுத்துக் கூறினார். அதாவது கங்குவா படத்துக்காக நான் பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களும் என் மீது வன்மத்தை கொட்டுகின்றனர்.
திருக்குறளில் இல்லாத வார்த்தையெல்லாம் போட்டு என்னை திட்டி தீர்த்து வருகின்றனர். அப்படி என்ன பேசிட்டேன் நான்? உண்மையிலேயே கங்குவா படத்தில் உங்களை விட எனக்கு தான் கோபம் அதிகமா வரனும். ஏன் தெரியுமா? அந்தப் படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா சிறுத்தை படம் பண்ணும் போதிலிருந்தே எனக்கு தெரியும். என்னை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்ல?
படத்தின் ஞானவேலும் என்னை செல்லம் என்றுதான் அழைப்பார். அவராவது என்னை பயன்படுத்தியிருக்கலாம்ல. என்னை பயன்படுத்தலைனாலும் அந்தப் படத்துக்காக நான் பேசினேன். எனக்கு இப்போது மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் வெளியில் போகும் போது எனக்கு எதாவது ஆகிவிட்டால் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பு ஏற்பார்களா?
கங்குவா படத்துக்கு அவ்வளவு விமர்சனம் வரும் போது முதன் முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். அதன் பிறகுதான் ஜோதிகா வாய் திறந்தார்கள். அவரை தொடர்ந்து சில தயரிப்பாளர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் விதை நான் போட்டது. ஏன் இவ்வளவு நடந்துச்சே? படத்தில் நடிச்ச யாராச்சும் வாயை திறந்தார்களா? என ஆவேசமாக பேசினார் கூல் சுரேஷ்.