Connect with us

Cinema News

ஐஸ்வர்யா தனுஷால் என்னை பழி வாங்கிய பிருந்தா மாஸ்டர்… ஆர்ஜே பாலாஜி கொடுத்த ஷாக்

Rj Balaji: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆர்ஜே பாலாஜி தான் ரேடியோ ஜாக்கியாக இருந்த போது செய்த விஷயத்தை வைத்து நடன இயக்குனர் பிருந்தா தன்னை பழி வாங்கியது குறித்த விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக இருந்த சமயத்தில் அவருடைய நிகழ்ச்சிக்கு ஒருமுறை ஐஸ்வர்யா தனுஷ் வந்திருக்கிறார். அப்போது கிராஸ் டாக்கில் ஆர்.ஜேபாலாஜி பிரபலங்களை கலாய்ப்பது வழக்கம்.

இதையும் படிங்க: Vijay: தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடல் விருந்து… அசத்தும் விஜய்!

அப்பொழுது ஐஸ்வர்யா பாலாஜியை பிருந்தா மாஸ்டரை கலாய்க்கும் மாறு கூறியிருக்கிறார். அவர் தனக்கு பிருந்தா மாஸ்டர் அறிமுகம் இல்லையே என தயங்க ஐஸ்வர்யா தனுஷ் பரவாயில்லை பேசுங்க என பேச வைத்திருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜியும் தன்னுடைய ஸ்டைலில் கால் செய்து பிருந்தா மாஸ்டரை கலாய்த்து விடுகிறார். இது அறியாத பிருந்தா மாஸ்டர் தொடர்ச்சியாக பத்து நிமிஷம் அவரிடம் பேசிய பின்னரே இது பிராங்க் கால் என்பதை தெரிந்து கொள்கிறார்.

இது முடிந்து சில ஆண்டுகள் கழித்து ஆர் ஜே பாலாஜி தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிக்க வருகிறார். அவரை சுந்தர்.சி பிருந்தாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஒரு பாடலுக்கான ஷூட்டிங் என்பதால் தன்னுடைய உதவியாளர் அழைத்து ஒரு ஸ்டெப்பை ஆர் ஜே பாலாஜிக்கு சொல்லிக் கொடுக்க அனுப்புகிறார்.

இதையும் படிங்க: கங்குவா போட்ட போடு!.. கண்ணுலையே கலவரம் தெரியுதே?!.. ஆர்.ஜே பாலாஜி என்ன சொல்லிருக்காரு பாருங்க

காலையில் தொடங்கி அந்த ஒரு ஸ்டெப்பை தொடர்ச்சியாக பல மணி நேரம் கற்றுக்கொள்ள வைத்தாராம். காலையில் சாப்பிட விடாமல் தொடர்ச்சியாக அந்த ஸ்டெப்பை மட்டுமே கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்.

பின்னர் 12 மணி வாக்கில் அவரை அழைத்து ஆட கூற ஆர் ஜே பாலாஜியும் தைரியமாக அதை ஆடி முடித்திருக்கிறார்.

உடனே டேக் ஓகே சாப்பிட்டு வந்து முடித்துக் கொள்ளலாம் என அனுப்பி விடுகிறார். இதனால் ஆர் ஜே பாலாஜிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டதாம்.

சரி என மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு நடிக்க வந்தால் அந்த ஸ்டெப் வேண்டாம் என கூறி விடுகின்றனர். கடைசியில் உங்க இஷ்டத்துக்கு ஏதாவது ஆடிக் கொள்ளுங்கள் என ஆர் ஜே பாலாஜிக்கு பல்பு கொடுத்து இருக்கிறார் பிருந்தா.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top