
latest news
எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிச்ச டயலாக் எதுன்னு தெரியுமா? கேட்டுறாதீங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க!
Published on
மாநாடு படம் வரும்போது தான் எஸ்.ஜே.சூர்யாவின் பர்பார்மன்ஸ்னா என்னன்னு 2கே கிட்ஸ்க்கே தெரிய ஆரம்பித்தது. வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு… அவரது டயலாக் டெலவரி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விரல் வித்தைக் காரரான சிம்பு தான் படத்தின் ஹீரோ. அவரே அதைக் கேட்டு ஆடிப்போய்விட்டார் என்றே சொல்ல வெண்டும்.
அந்த டயலாக்கை அவரும் படத்தில் சொல்வார். படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுதான் அப்போது ட்ரெண்டிங் வசனமாக இருந்தது. ஆக மாநாடு படத்தில் சிம்புவுக்கு டஃப் கொடுக்கும் வில்லன். டான் படத்தில் சிவகார்த்திகேயனின் வில்லனாக நடித்து எஸ்.ஜே.சூர்யா அசத்தினார்.
Also read: கங்குவா போட்ட போடு!.. கண்ணுலையே கலவரம் தெரியுதே?!.. ஆர்.ஜே பாலாஜி என்ன சொல்லிருக்காரு பாருங்க!..
அதே நேரம் நான் வில்லன் கிடையாது. என்னைக்குமே ஹீரோ தான்னும் ஒரு முறை பேசி உள்ளார். அவர் பொம்மை, கடமையைச் செய் ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். குறிப்பாக மார்க் அண்டனி படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து அசத்தினார்.
இந்தப் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் தான் இப்போது அஜீத்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கி வருகிறார். மார்க் அண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பர்பார்மன்ஸ் அருமையாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசியது கலகலவென சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் இருந்தது. என்னன்னு பாருங்க.
Mark antony
எஸ்.ஜே.சூர்யாவிடம் சைமா விருது வழங்கும் விழாவில் ஆங்கர் சதீஷ் கேள்வி கேட்டார். அது என்னன்னா நீங்க பேசுனதுலேயே உங்களுக்குப் பிடிச்ச டயலாக் எது?ங்கற கேள்வி தான். அதுக்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் எஸ்.ஜே.சூர்யா சொன்ன பதில் தான் ஹைலைட்டாக இருந்தது. ‘அவன் கெடக்குறான்டா மயிராண்டி’.
இப்படி ஒரு பதிலை சொன்னதும் ஆங்கர்ஸ் உள்பட அரங்கத்தில் உள்ள அத்தனை பேரும் கலகலவென சிரித்து ரசித்தனர். எஸ்.ஜே.சூர்யாவின் இந்த டயலாக் மார்க் அண்டனியில் வரும். அவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர். அதனால் அந்த வட்டாரப்பாஷையில் பேசி மனிதர் படத்தில் அசத்தியிருப்பார்.
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
Karur: தவெக தலைவர் விஜய் நேற்று கரூர் சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை...
TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர்...