Connect with us
ar rahman

Cinema News

இப்படியெல்லாம் பேசாதீங்க?!.. அவர் அற்புதமான மனிதர்!… ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!…

ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு விவாகரத்து குறித்து விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டு இருக்கின்றார்.

சமீப நாட்களாக சோசியல் மீடியாவில் ஏ.ஆர் ரகுமானின் விவாகரத்து சர்ச்சை தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக தனது கணவர் ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அவர் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஏ ஆர் ரகுமானும் இந்த விவாகரத்து குறித்து உருக்கமாக பேசி பதிவு வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சுந்தர்.சி.யைக் கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்… இதுக்கெல்லாமா திட்டுவாரு?

கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த ஏ ஆர் ரகுமானும், அவரது மனைவி சாய்ராவும் திடீரென்று விவாகரத்து அறிவித்தது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்திருக்கலாமே என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என்று சமூக வலைதள பக்கங்களில் சினிமா விமர்சகர்கள் பலரும் ஆளுக்கொரு காரணங்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்தில் அவரின் இசைக்குழுவில் இருக்கும் இசைகலைஞர் மோகினி டே விவாகரத்து அறிவித்த காரணத்தால் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி கிசுகிசுக்கள் எழுத தொடங்கி விட்டனர்.

ARR sairabanu

ARR sairabanu

ஏ ஆர் ரகுமான் மீது அவதூறு பரப்பும் வகையில் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை பார்க்க முடிந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்று கூறி அவரது மகன் மற்றும் மகள் விளக்கம் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று தங்கள் விவாகரத்து தொடர்பாக அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் மற்றும் youtube வீடியோக்களை நீக்க கோரி ரகுமான் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உடனடியாக அவற்றை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பிரிவது ஏன் என்று விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது’ நான் தற்போது மும்பையில் வசித்து வருகின்றேன். எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன். சிகிச்சைக்காக தொடர்ந்து மும்பையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்தேன்.

இதையும் படிங்க: விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..

அனைத்து youtuberகளுக்கும் தமிழ் மீடியாக்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்துக் கொள்கின்றேன். இந்த உலகத்திலேயே ஒரு மிகச்சிறந்த மனிதர் ஏ ஆர். எனது உடல்நிலை காரணமாக தான் அவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருக்கின்றேன். தற்போது ஏ ஆர் ரகுமான் சென்னையில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றார். எனது உடல் நிலை காரணமாக அவருக்கு எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதால் அவரை விட்டு பிரிகிறேன்.

ஏ ஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர். அனைவருக்கும் நான் வைத்துக் கொள்ளும் கோரிக்கை ஒன்றுதான் ஏ ஆர் ரகுமான் குறித்து எந்த அவதூறும் பரப்பாதீர்கள். நான் எந்த அளவுக்கு அவரை காதலிக்கிறேன், எந்த அளவுக்கு நம்புகிறேன் என்பது எனக்கும், அவருக்கும் தெரியும்’ என்று உருக்கமாக அந்த ஆடியோவில் பேசியிருக்கின்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top